கை வீணையை ஏந்தும் கலை வாணியே..!


சின்ன வயதில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து சரஸ்வதி பூஜையின் போது இந்தப் பாடலை பாடியிருந்தோம் … எப்போதுமே இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த வெள்ளை பாவடையில் நாம் சுத்தித்திரிந்து கடலை அவலும் உண்டுகளித்து உலாவிய நாள் தான் நினைவில் வரும்… மீண்டும் ஒருமுறை அந்தநாள் வாராதா என்பதுபோல் எங்கித்தவிக்கும் மனம்…

அருமையான பாடல் எந்த கடுமையான இதயங்களையும் இனிமையாக சென்றடையக்கூடிய பாடல்..
பொம்பே ஜெயசிறியின் மதுரக்குரலில்..

ஸகரி மகபம தாப மபகம ரிகரி ரிகமககக

கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
திருமலர் தாள் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
திருமலர் தாள் போற்றி வா கண்மணி
வணங்குவோம்..

உன் கோயில் எங்கும் நாதஸ்வரங்கள் கேட்கும்
அந் நாதம் நெஞ்சில் உன்தன் நினைவை வார்க்கும்
நாள் தோறும் பாயும் நாத வெள்ளம் நியே
பாவானர் நாவில் மேவும் எங்கள் தாயே
உன்தன் பாதம் போற்றி உன்தன் பிள்ளைகள்
நாங்கள் வேண்டும் வரங்கள் தாராயோ…

(கை வீணையை)

பாட்டாலே மீரா நந்தன் வசமே சேர்ந்தாள்
பூங்கோதை ஆண்டாள் கண்ணன் மனதை ஆண்டால்
ஆண்டாலை போலே பாவை ஒன்றே பாடு
ஆண்டாண்டு காலம் அன்புதன்னை தேடு
தஞ்சம் நீயே என்று நெஞ்சும் நாவும் நாளும் பாட
வரங்கள் தாராயோ…

(கை வீணையை ஏந்தும்)

நம்ம தோட்டத்து முல்லை மல்லிகை


அது என்னவோ தெரியேல்லை  மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை மட்டுமே மணக்க நம்ம மூக்கையெல்லாம் சந்ததி சந்ததியா பழக்கிப்போட்டினம். எங்கவீட்டு முற்றத்திலை கொத்துக்கொத்தா பூத்துக்குலுங்கி பறிக்க ஆளில்லாமல் கிடைக்கிற முல்லமல்லிகையை நாங்க கண்டுக்கிறதே இல்லை அப்படி பூத்துக்குலுங்கின ஒரு நம்ம தோட்டத்து முல்லைமல்லிகையை முகரக்கிடைச்ச ஒருசில அதிஷ்ரசாலிகளிலை நானும் ஒருத்தியாப்போனதிலை எனக்கு அப்படி ஒரு சந்தோஷம், அப்படி ஒரு ஆச்சரியம் கர்நாட சங்கீதம் பற்றி தேடித்தேடி ஆரயிர எனக்கே தொரியாமல் இப்படி ஒரு கலைஞரை எப்படி எம் மக்கள் ஒளித்து வைத்திருந்தார்களோ அது யாழ்ப்பாண மண்ணுக்குத்தான் தெரியும்….

Dr  ஹீ. தாஷனன் இசை முது விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்…. கம்பீரமான   கணீர் என்ற குரல்   தமிழுக்கு இப்படியொரு அழகிருக்கின்றது என்று இவர்குரல் எடுத்துக்காட்டியது… எனக்குக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பார்வையாளர்களின் தன்மை கருதி முழுக்க முழுக்க அவை கர்நாடக சங்கீதத்தில் மூழ்கியவையாய் இல்லாதிருந்தாலும் கூட இவை எனக்கு நல்லூர்த்திருவிழாவில் கிடைக்கும் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் கிடைத்த இனிய அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்தியது.

எம்மவர்களால் நடாத்தப்படும் இசை நிகழ்வுகளில் அரங்கேறும் உன்னிக்கிருஷ்னன், நித்தியஹீ போன்ற இந்தியக்கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு இருபது பவுண்களைச் செலவழித்தும் இறுதி வரிசையில் உக்கார்ந்து பார்க்கும் எமக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது பாக்கியமாக உணர்ந்ததோடு எம் இலங்கைமக்களின் அறியாமையை நினைத்து வேதனையாகவும் இருந்தது.
இந்த சங்கீத வித்துவான் தர்ஷனன் அவர்கள் இலண்டனில் பல ஆலயங்களில் எம்மைப்போல ஒருசில பக்தர்களின் விருப்பத்துக்கிணங்க கச்சேரிகளை நடத்தியிருந்தார் இவரைப்பற்றி ஒரு பெரியவர் கூறுகையில் “காலங்காலமாக  இந்துமதம் சம்பந்தர் அப்பர்போன்ற இசைக்கலைஞர்களாலும் கவிஞர்களாலுமே காப்பற்றப்பட்டும் பரப்பப்ட்டும் வந்தது. இப்போதும் கூட எம்மவரகளிடையே இசைஞானம் திசைமாறிப்போகுகையில் இவர் போன்ற கலைஞானமுடையவர்களின் சேவை இன்றியமையாததாக நிற்கின்றது… இவர்போன்ற கலைஞர்களை மற்றவர்களுக்கும் இனம்காட்டி உரிய அங்கீகாரம் தேடிக்கொடுப்பது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்” என்று கூறினார்…

அங்கு இவரால் பக்திப்பாடல்கள் அடங்கிய மூன்று இசைத்திரட்டுகள் வெளியிடப்ப்ட்டன ஒவ்வொன்றும் அருமையானவை அதில் பஞசபுராணத்திரட்டு எங்கள் வீட்டில் எப்போதுமே ஒலித்தபடி இருக்கும்.

என்னைப்போன்ற பலரது வேண்டுகோள் என்னவெனில் இவர் இன்னும் பல இசைத்தட்டுக்களை வெளியிட்டு குறிப்பாக வீரமணி ஜ்யரின் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கள் கொண்ட பாடல்களை வெளியிட்டு அதை விஸ்தாரமான முறையில் விளம்ப்படுத்தி எம் ஒவ்வொருவர் கைகளிலும் கிடைக்கச்செய்யவேண்டும்

நாளைய எங்கள் அரங்குகளில் இவர்போன்ற ஈழத்துக் கலைஞர்களின் பெயர்களும் இந்தியக்கலைஞகர்களுக்கு நிகராக ஒலிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுவதில் எந்த தகுதியின்மையும் இருப்பதாக நான் நினைக்கவில்ல….!

சட்டுப்புட்டு சமையல்


நீண்ட நாளுக்கப்புறம்…நிறையநாள் விடுமுறை நம்மை படு சோம்போறி ஆக்கீற்றுது. நிறைய எழுதோனும் போல இருக்கும் ஆனா நேரம் கிடைக்கிறதில்லை சீ சீ நேரத்தை நான் என்ரை புளக்குக்கு ஒதுக்கிறதில்லை. இன்டைக்கு நான் எழுதிறதை நீங்கபடிக்கிறீங்களோ இல்லையோ இதை இப்ப நான் எழுதினா நாளைக்கு எனக்கே உதவும் எண்டிட்டு எழுதிறன்.

முதலில் மற்றவையை வழைச்சுப்போட நம்ம பொண்ணுங்க பயன்படுத்திற ஆயுதம் – சமையல்….!

நம்ம வீட்டுச்சமையல் எப்பவும் சட்டுப்புட்டுத்தான். “வேலையால வந்தநேரம் தொடக்கம் ஏன் கிச்சினுக்க கிடக்கிறாய், சட்டுப்புட்டென்டு ஒரு கறியச்செய்தா ஏதோ ரொட்டியோடையோ பானேடையோ சாப்பிடலாம் தானே. சும்ம ஏதோ சாப்பிட்டிட்டு பிள்ளையோட மினக்கடிறதை விட்டிட்டு…” என்று ஈசியாக ஆனா ருசியாக ஏதாவது சமைத்து தரமாட்டளாஎன்டு நினைக்கிற கஷ்பன்டு. “அம்மா வாங்கோ ரோயிங் கீறுவம்” என்று பின்னாலேயே திரியும் பிள்ளை. வேற வளியில்லை ஏதாவது சட்டுப்புட்டு சமையல்தான்.

ஒரு 20 ருசியான சாப்பாட்டு முறையைக்கைவசம் வச்சிருந்தமெண்டாக்காணும். தீடீரென விசிற்றஸ் வந்தாக்கூட ஈசியா அசத்தி “தமிழினிக்கு நல்லா சமைக்கத்தெரியும்” எண்டு பேரும் வாங்கிடலாம். சரி நீட்டிமுளங்கி நேரத்தை வேஸ்ராக்காமை விசையத்துக்கு வாறன்.

கோழி மரக்கறி கூட்டுக்கறி

இது என்னோட ஓன் தயாரிப்பு. நம்ம வீடுமாதிரி மரக்கறிகளை கொஞ்சம் தள்ளிவக்கிர மனிசர்கள் இருக்கிற இடத்துக்கு இது நல்ல உணவு. நல்ல சத்துள்ள மச்சவாடை அடிக்கிற உணவு 🙂
ஒரு 250g சிக்கின், அரைத்த இஞ்சி உள்ளி, உப்பு, கொஞ்சம் தேசிப்புளி, வெங்காயம் கொஞ்சம் அதிகமா போடலாம, கறுவா ஏலக்காய் விருப்பமெண்டா போடுங்க, எலலாவகையான மரக்கரி தேவையான அளவு (கத்தரிக்காய் , தக்காளி, கோளிபிளவர், போஞ்சி, ஆசனிப், பாசனிப், முள்ளங்கி, ஊருளைக்கிழங்கு, சுவீட்பொட்டட்டோ, ஸ்பிரிங் ஒனியன் என்ன மரக்கறி வேணுமெண்டாலும் போடலாம்), தேவையான அளவு கறித்தூள்.
இவற்றை நன்றாகக்கலந்து ஒரு டிஸ்ஸில் போட்டு பொயிலால் முடி அவுனுக்குள் வைத்துவிடுங்கள் மொத்தமாக 1 மணிநேரம் வைத்தால் போதுமாக இருக்கும் இடையில் இரண்டுதடவை வெளியே எடுத்துக்கிண்டி விடுங்கள் அவ்வளவுதான் சமையல் ரெடி இதை நீங்கள் எந்தவகையான உணவுக்கும் கூட்டாகப்பாவிக்கமுடியும் ரொட்டி, பரோட்டா, பாண், சோறு, பிட்டு, இடியப்பம்…. அவுன் வசதி இல்லதவர்கள் அடுப்பில் ஒரளவு லோகீற்றில் வைத்து சமைக்கமுடியும்.

மிச்சத்துக்கு நெக்ஸ்ற்வீக் வாங்க பிளீஸ்
(புதுசா கண்டுபிடிக்க டைம் குடுங்கப்பா)

15 May 2012

கடலை சாதம்
“ஒரு ஊரிலை ஒரு ராஜா இருந்தாராம் அவர் ஒருநாள் காட்டுவளியால நடந்துபோகேக்கை ஒரு பள்ளத்துக்க மாறிக் காலை வைச்சிட்டராம் ராஜா ஆ எண்டிக்கொண்டு ” எண்டு கதைசொல்லி ஆக்காட்டவைச்சு சாப்பாடு தீத்திறை நம்மளமாதிரி அம்மாமாருக்குத்தான் தெரியும் சமைச்சு அதை குட்டீசுக்கு ஊட்டிறதிந்தை கஷ்ரம். ஒருவாயிலை பத்து வாய்சாப்பாட்டிண்டை சத்தைக் குடுத்தாத்தான் நாலு வாயிலை காணுமெண்டு தலையாட்டிறதுகளை ஒரு ஆரோக்கியமானதுகளா வளக்கமுடியும்.
இபப்டி தேடித்தேடி சமைச்சதிலை (கண்டுபிடிச்ச) நான் கண்டுபிடிச்சதெண்டு நினைச்ச பாகிஸ்தான் காரருடைய கடலை சாதத்தைப்பற்றி உங்களோட பகிரப்போறன்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் (மிகச்சிறிய துண்டாக வெட்டப்பட்டவை) – 2 பெரிய வெங்காயம்
கருவேப்பிலை (மிகச்சுறிய துண்டாக பிக்கப்பட்டவை) – 6 , 7 இலைகள்
பச்சமுளகாய் (மிகச்சிறய துண்டாக வெட்டப்பட்டவை ) – 2 (உங்கள் சுவைக்கேற்ப கூட்டடிக்குறைக்கலாம்)
வடித்தெடுக்ப்பட்ட சாதம் (அவிந்த) – 1 சுண்டு
அவிக்கப்பட்ட கடலை – அரை சுண்டு (கொள்கலனில் பதப்படுத்தப்பட்ட கடலையை நீங்கள் அப்படியே பாவிக்கலாம்)
கடுகு சிறிதளவு
சின்னச்சீரகம் கொஞசம் அதிகளவு (இதுதான் சாத்தின் சுவையைக் கூட்டும்) – அதற்காக அதிகம் போட்டுவிடாதீர்கள்
உப்பு சிறிதளவு
பட்டர் / நெய் /எண்ணை

இப்போது செய்முறைக்கு வருவோம்  get set ready go……..

எரியும் அடுப்பில் சூடேற்றப்பட்ட பாத்திரத்தில் சிறிதளவு பட்டர் / நெய் /எண்ணையை சிறிதளவு இடடுக்கொள்ளுங்கள் அது நன்றாக கொதித்தவுடன் கடிகைப்போட்டு வெடிக்கவிட்டு சின்னச் சீரகத்ததையும் வெங்காயத்தையும் கருவேப்பிலையையும் பச்சமுளகாயையும் கொஞ்சம் உப்பையும் போட்டுக்கொள்ளுங்கள் (நீங்கள் சேர்த்த வெங்காயத்தோடு அளவாக சேரவேண்டிய அளவுமட்டும்) போட்டுக்கொள்ளுங்கள் சிறிது நேரம் தாளிப்பதுபோல் கிண்டி எடுத்து வெங்காயம் பொன்னிரமாக வந்தவுடன் கடலையைக்கொட்டி விடுங்கள். இப்போது அடுப்பின் பிளேமை வெப்பத்தைக் குறைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் அவற்றை மாறி மாறி கிண்டி விட்டுக்கொள்ளுங்கள். பின் சாதத்தையும் பாத்திரத்தில் இட்டு நன்றாக சேரும்படி கிண்டிக்கொள்ளுங்கள் பின் இன்னும் சிறிது பட்டரையோ நெயையோ எண்ணையையோ சேர்த்து நன்றாக சேரும்வரை கிண்டிக்கொள்ளுங்கள். மீண்டும் தெவையான உப்பைப்போட்டு கிண்டிக்கொள்ளுங்கள். சுவைத்துப்பார்த்து சுவைக்கேற்ப உப்பை சேர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் கொஞ்சம் காரப்பிரியராய் இருந்தால் கொஞ்சம் தட்டிய மிளகுதூளைச்சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போ சாதம் ரெடி எங்க வீட்டை கூட்டில்லாமலே சின்னது சாப்பிட்டிடும் பெரியவைக்கு ஏதாவது ஒரு சின்ன கட்டிக்கறி (திக்கான கறி அல்லது பிரட்டல் கறி) வைப்பேன். அவ்வளவுதான்.

சமைச்சுப்பாருங்க சின்னவைக்கு பிடிக்கக்கூடிய அதிகம் உறைப்பில்லாத சுவையான சத்தான உணவு. இதே போல் எங்கள் வீட்டில் பலவகையான சாதம் செய்வேன் போஞ்சி சாதம் – கடலைக்குப்பதில் மிக மிக சிறிதாக வெட்டி எடுக்கப்பட்ட  (அல்லது பூற் புறசசறில் food Processor வெட்டி எடுக்ப்பட்ட போஞ்சி) யை சேர்ப்பதுண்டு. அல்லது பச்சைக்கடலையை (green peas) சேர்ப்பதுண்டு.

ஈஸ்ரருக்காண்டி நாளை விடுதலை


“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!”

சின்னவயசிலை ஆடிப்பிறப்புக்கு முதல் ஆடிப்பாடியது இப்ப வயசை மறந்து ஈஸ்ரர் விடுமுறைக்கு ஏதாவது பாடோனும் போல இருக்கு – நான்கு நாள் விடுமுறை ஆனா நாப்பது நாள் மாதிரி – எவ்வளவு இன்பம்……!

ஈஸ்ரருக்காண்டி நாளை விடுதலை
நாலுநாள் வீட்டிலை குளுக்குத்தலாம்  
நீட்டி நிமிர்ந்து நீண்ட நேரம் படுக்கலாம்
நிம்மதியாய் கொஞ்சம் முச்சிடலாம்

பலகாரம் பணியாரம் பலதும் செய்யலாம்
பசிக்கெண்டில்லாமல் ருசிச்சு சாப்பிடலாம்
விட்ட தொட்ட உறவுகள் கூடலாம்
வீண்பேச்செல்லாம் கூடிக்கதைக்கலம்

கோயிலுக்கு கூட பூசைக்குப்போகலாம்
கொஞ்சம் அங்கேயே நிம்மதி தேடலாம்
இன்னுமென்னனவோ சொல்ல இருக்குது
நேரம் இல்லை இது விடுமுறை நாளில்லை

ஈஸ்ரருக்காண்டி நாளை விடுதலை 
நாலுநாள் வீட்டிலை குளுக்குத்தலாம்

மடிதவழ்ந்தய் நீ என் மலர்முகமே…!


மடிதவழ்ந்தய் நீ என் மலர்முகமே...!

நிலவுவந்தது – கட்டியணைக்க காலமும் வந்தது…
நிலவிருந்தது நீண்டனாளாய் என்னருகே – ஆனல்
ஒரு மலருமில்லை அரும்புமில்லை
மலடியென்று என்னை மழுங்கடித்த சொந்தங்கள் மலைத்துநிக்க
மடிதவழ்ந்தhய் நீ என் மலர்முகமே…! எம்
நினைவெல்லாம் உன்னருகே நீண்டிருக்க உன்
நினைவெங்கே போனதுவோ?
கனியே என் கண்ணளகே… நாம் கதலித்த கணக்கெழுத
வந்த என் சித்திரமே.
வரியிருக்கோ வார்த்தையால் வரித்து நான் எழுதிவிட
வளியில்லை, வட்டிக்கெடுத்து விட்டேன் என் ஆசான் பாரதியின் வரிகள் தனை.

” மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகள் உண்டே
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பெரிதும் உண்டோ?…..

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி.
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடினோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி…..!”

அந்த பாரதி இவ்வண்ணம்
உன் வருகையின் குறிப்பறிந்து இட்டுவைத்த கவியிதுவோ?
கண்ணளகே என் கனியமுதே…!
கண்ணிவென்ன கலக்கம் தோற்றி
எண்ணி என்ன விடைகண்டு
ஏற்றிவிட நினைத்தாயோ
விட்டுவிடு உன்துயரை பெற்றவள் நானிருக்க
விட்ட குறை என்ன கண்டாய்?

இப்படியும் ஒரு பயணம்


யாழ்ப்பாணத்தை விட்டு போயே ஆகவேண்டும் என்பதை சுப்பிரமணியத்தின் குடுப்பம் கடைசிநேரத்தில் தான் முடிவெடுத்துக்கொள்கிறது.
“மரகதம், நிறைய சாமான் சக்கெட்டேல்லாம் கொண்டு போகேலாதாம், சுமந்திரனாக்கள் சொன்னவங்கள் இதுதான் கடைசிநாளோ தெரியேல்லையாம் மிச்சமிருக்கிற ஆக்களைக்கொண்டு போய்ச்சேக்கிறதே கஷ்ரமாம், ஒரு உடுப்புபாக்கும், ரெண்டு மூண்டு சட்டிபானையும், மீனாண்டையும், மதன்டையும் புத்தகத்தையும், டொக்கீமண்ட் பாக்கையும் மட்டும் எடுத்து வச்சாப்போதும், என்ன நான் சொல்லுரது விளங்குது தானே?” Continue reading

குழந்தை வளர்ப்பு: விலங்கொடு மனிதராய்……


நன்றி – றஞ்சி (சுவிஸ்)
இன்று புலம் பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய வேண்டியுமிருக்கிறது. இவை சம்பந்தமான கருத்துக்கள், வளர்ப்பு முறை, குழந்தைகளை அணுகும் எமது கலாச்சாரமுறை, எமது குழந்தைகளை நாம் வளர்க்கும் விதம், போன்றவைகளை கேள்விக்குள்ளாக்கும் நிலையும் தேவையும் இன்று எமக்கு அவசியமானதொன்றாக இருக்கிறது. நாம் குழந்தையை ஆளுமையுடன் வளர்ப்பது சம்பந்தமாக பெற்றோர்களாகிய எமக்கு எந்த விதமான அறிவும் முன்னர் இருக்கவில்லை. பெற்றோர்களின் ஆளுமைக்குள்ளேயே அவர்கள் முடங்கிப் போக நேர்கிறது. ஆனால் குழந்தைகளை தனித்துவமாக சிந்திக்க பெற்றோர்கள் விட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லது. நாம் புலம் பெயர்ந்து வந்த பின் தான் இதன் தேவையை உணரக் கூடியதாக இருக்கின்றது. இதனால் குழந்தை வளர்ப்பு பற்றி எமது அறிவை விருத்தி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

Continue reading

புனிதமாகும் திருமணவாழ்க்கை


“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” – திருவள்ளுவர்

கணவன் மனைவி உறவு என்பது ஒரு தவம், காவியம்… என்று எப்படியெல்லாமோ வர்னிக்கலாம் ஆனால் அதை வாழ்க்ககையாக வாழ்ந்தவர்களைக் காண்பது என்பது இப்போது உள்ளசூழலில் மிகவும் அரிது…
நம்மைப்போன்ற பலர் இப்படி நாமும்  வாழவேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதோடு மட்டும் நிறுத்திவிடுகிறோம், சிலர் அவர்கள் வாழ்க்கைமுறையை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொள்கிறோமே தவிர அப்படி நடந்துகொள்ளத் தவறி விடுகிறோம். “நாம் இத்தனையாண்டுகள் ஆயிற்று திருமணம் செய்து” என்று   கூறிக்கொள்பவர்களில் எத்தனை பேர் உண்மையாக ஒருவருக் கொருவர் உள்ளன்போடு வாழ்ந்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே. ஒன்றில் கணவன் அதிகம் விட்டுக்கொடுத்து (எம்ழூரில் இதை பெண்டாட்டி தாசன் என்பர்) காலத்தை ஓட்டுவர் அல்லது மனைவி அதிகம் விட்டுக்குடுத்தோ பயந்து அடங்கி நடந்தோ (இதைத்தான் சிதம்பர ராட்சியம் என்பர்) 10 என்ன 50 ஆண்டுகளைக்களிப்பர். எங்கேயோ ஒரு சில ரத்தினங்கள் மாத்திரம் வாழ்க்கையை வரலாராக வாழ்ந்து காடடுகின்றனர். அப்படிப்பட்ட இரு ரத்தினங்களின் நாப்பது ஆண்டு திருமண நிறைவு விழாதான் நேற்று வெகுசிறப்பாக அவர்கள் நண்பர்களால் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட ஒரு வகை நெகிழ்ச்சிதான் என்னை இந்தப்பதிவை எழுத வைத்தது. (நெகிழ்ச்சி என்பது எம்மைப்புகழும்போது மட்டுமல்ல   அது எம்மை ஏதோ ஒரு வகையில் சேர்ந்தவர்களுக்கு என்றால் கூட  ஏற்படும் இல்லையா?) Continue reading

இருவரும் என் மாணவரே!


இருவரும் என் மாணவரே—————————–

“கோசலை மைந்தா ராமா விடியல் தோன்றித்துலங்குதே எழுந்தருள் உத்தம ஹரியே நடந்திடும் நல்லகாரியம்———————“

என்று காதிற்குள் புகந்த அந்த மென்மையான ஒலி சுப்பிரமணியத்தை கண் விழிக்கச் செய்தது. அவர் மெதுவாகத்தலையைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தார் அது மணி 6 ஜக்காட்டியது. வழமையாக சுப்பிரமணியம் தான் எல்லோருக்கும் முன் எழுந்து வானொலியில் செய்திகளை அலரவிடுவது வழக்கம் ஆனால் இப்போஅவரின் மகள் சஞ்சீவி விடுமுறையில் வந்திருந்ததால், இது அவள் ஆடசிக்காலம். அவள் விருப்பத்துக்குத்தான எல்லாமே நடைபெறும்.
Continue reading