வாருங்கள் நாங்கள் போவோம் கோயில்கள் தேடி – அங்கு வருவார்கள் எங்கள் எல்லாததெய்வங்களும்….!


நாம் ஈழத்தமிழர்கள் என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம் – நம்மில் ஒருவரை சகோதரனையோ, சகோதரியையோ, மச்சாளையோ, அத்தானையோ, நண்பரையோ, காதலியையோ  போராளியாக சாகக்குடுத்தவர்கள்.

ஒவ்வெரு வரைச்சுத்தியும் மறக்கமுடியாத வடுக்கள் மடிந்துகிடக்கின்றன. சிலர் சிலாபித்துக்கொள்கிறோம் இவை மறக்கப்பட வேண்டியவை என்று, சிலர் சிலிர்த்துக் கொள்கிறோம் இவை மன்னிக்கமுடியாதவை என்று சிலர் சலித்துக்கொள்கிறோம் இவை சபிக்கப்பட்டவை என்று….

இப்படி ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்தவர்கள்தான் மாவீரர்கள்.
அவர்கள் வெந்த பூமியில் துயிலும் இல்லங்கள் இல்லை நாம் வந்தபூமியில் நம்மில் பலருக்கு இதன் தாற்பெரியம் தெரியவில்லை   அதில் வணங்குமில்லங்கள் வணங்கக்கூடியதாய் இல்லை????

தொலைந்து போன எம் முறவுகள் எங்கே வருவார்கள்? வாருங்கள் எல்லோரும் கோயில்கள் தேடி அங்கே இருப்பார்கள் இந்த தெய்வங்கள் எல்லாம்..

வாருங்கள் போவோம் எம்மில் இருக்கும் அவர்கள் நினைவுகள் சுமந்தபடி

இவர்கள் உண்மையானவர்களா? அவர்கள் உண்மையாணவர்களா என்று பிரித்துப்பார்க்கும் வல்லமை இழந்தவர்கள்னாம் – இவர்களைப்பார்த்து அவர்கள் துரோகம் என்று – அவர்களைப்பார்த்து இவர்கள் சொல்கிறார்கள் இது சுயநலம் என்று – ஈழத்தமிழர்கள் எம் வரலாற்றில் துரோகத்தையும் சுயநலத்தையும் நிறையவே பார்த்துவிட்டோம்… இனி வேண்டாம்

இவர்கள் உண்மையானவர்களா? அவர்கள் உண்மையாணவர்களா என்று பிரித்துப்பார்க்கும் வல்லமை இழந்தவர்கள்னாம் – இவர்களைப்பார்த்து அவர்கள் துரோகம் என்று – அவர்களைப்பார்த்து இவர்கள் சொல்கிறார்கள் இது சுயநலம் என்று – ஈழத்தமிழர்கள் எம் வரலாற்றில் துரோகத்தையும் சுயநலத்தையும் நிறையவே பார்த்துவிட்டோம்… இனி வேண்டாம் இந்த வார்ததைகள் எம் அகராதியில்…

வாருங்கள் நாங்கள் போவோம் கோயில்கள் தேடி – அங்கு வருவார்கள் எங்கள் எல்லாததெய்வங்களும்….!

2011 மாவிரர்நாள் விட்டு விடுவோம் இலக்கணப்பிளையாக – இப்போதே தொடங்கிவிடுவோம் 2012 ஆம் ஆண்டு மாவீரர் நாளைப்பற்றித்திட்டமி…

இதுயாரு புதிதாக என்று சலித்துக்கொள்ளாதீர்கள் இது யாருமல்ல நீங்கள் தான் உங்கள் அசரீரிதான் பேசுகிறது….

என்னினைவு தெரிந்தநாள் முதல் கடைசியாக வன்னியில் நடந்த மாவீரர்நாள் வரை அது புனிதமானது – துக்கம் நெஞசடைக்க ஒவ்வெருவரையும் கண்ணீரோடு கைகூப்பவைக்கும் வணக்கத்துக்குரிய நாளிது கந்தர் சஸ்ரியிலும் புனிதமானது என்னைப் பொருத்தவரை ஒப்பிடுவதற்கு எதுவுமே இல்லை ….

மாவீரர் இல்லங்கள் தேடி மக்கள் படை எடுப்பர் விமான பயம் எதுவும்  எவரையும் தடுத்து நிறுத்தாது வளியற்றோர் வாசலெல்லம் சுடர் வைப்பர் ஆலையங்கள் அழைப்பொலி எழுப்பும்

ஒருவகையில் எல்லேர்வீட்டிலும் சிஸ்டிக்கப்படும் வீரர்களுக்கான் மரணவீடு…

மரணவீடு – நாட்டிலுள்வர்கள் நாதியற்றவாகள் இப்போது அவர்க்கிருக்கும் கடமை தம்முயிர்காப்பது – நாட்டிலில்லாதோர் நாம் எப்படி இதை கொண்டு செல்லப்போகிறோம்?

இப்போது இருப்பது போல் துரோகிகளினதும் சுயநலவாதிகளினதும் கையில் விட்டால் இன்னும் இரு வருடங்களில் மாவிரர்நாளைக்கூட நாம் புத்தகங்களில் படித்து அறிய வேண்டியதாகிவிடும்..

இது யாருடையநாள் மாவீரர்நாள் மாவீரர்கள் யார்? எங்கள் ஒவ்வெருவருடையவர்கள்! இதை அனுஸ்டிக்க வேண்டியவர்கள் யார் நாம் ஒவ்வெருவருமே… இங்கே யாருடைய ஒழுங்கமைப்பும் தேவையில்லை எதற்காகவும் யாருக்கும் நாம் பணங்கொடுக்கவும் தேவையில்லை தமிழீழத்தில் மாவீரர்நாள் கார்த்திகைப் பூவாழ் மட்டுமெ அனுசரிக்கப்படவில்லை சிட்டிகைகளோடும் பூக்களோடும் வாருங்கள் எங்கள் அருகில் உள்ள திறந்தவெளி மைதானங்களுக்கு ; விரிவுரைகளுக்கு தேவையில்லை, மௌனித்து நிற்போம – எம்மைச்சூழ உள்ள மற்ற சழூகத்தினர் பேசட்டும் எம் உணர்வுகூரலைப்பற்றி

துயிலுமில்லங்கள் போலவே சுவையூட்டப்பட் உணவுகளுக்கு தேவையில்லை பகட்டு ஆடைகளுக்கு வேலையில்லை போலி வாய்வீச்சுகளுக்கும் அவசியமில்லை –

பூக்களாலும் தீபங்களாலம் அலங்கரித்துக்கொள்வோம் மௌனித்து வேண்டுதல் செய்வோம் விரைவில் உங்கள் கல்லரை தொடு வோம் என்று…ழூடிய கூடாரங்களுக்குள் நம் சமூகத்தினர்மட்டுமே அறிய நடத்த வேண்டிய அவசியம் என்ன? – எம்மிடம் உள்ள ஒரே உயிர் மூச்சு எம் மாவீரர்கள் தான் அவர்களுக்காக நாம் நினைவுகூறும் இந்நாட்களை சக்தியுள்ள போராட்டதன்மையாக வேண்டியது காலத்தின் கட்டாயம் –

முதலில் எங்கள் Local Guardian News Paper கள் பேசட்டும் எங்கள் தொழுகையின் புனிதம் பற்றி – அப்போது புரியும் புலிகளின் புனிதம்,  நாளை …………..உலகே வியந்து பேசும் இது மட்டும் போதும் எமது போராட்டத்துக்கும் புலிகளுக்கும் அங்கீகரம் பெற்றுக்கொடுக்க

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s