புனிதமாகும் திருமணவாழ்க்கை


“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” – திருவள்ளுவர்

கணவன் மனைவி உறவு என்பது ஒரு தவம், காவியம்… என்று எப்படியெல்லாமோ வர்னிக்கலாம் ஆனால் அதை வாழ்க்ககையாக வாழ்ந்தவர்களைக் காண்பது என்பது இப்போது உள்ளசூழலில் மிகவும் அரிது…
நம்மைப்போன்ற பலர் இப்படி நாமும்  வாழவேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதோடு மட்டும் நிறுத்திவிடுகிறோம், சிலர் அவர்கள் வாழ்க்கைமுறையை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொள்கிறோமே தவிர அப்படி நடந்துகொள்ளத் தவறி விடுகிறோம். “நாம் இத்தனையாண்டுகள் ஆயிற்று திருமணம் செய்து” என்று   கூறிக்கொள்பவர்களில் எத்தனை பேர் உண்மையாக ஒருவருக் கொருவர் உள்ளன்போடு வாழ்ந்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே. ஒன்றில் கணவன் அதிகம் விட்டுக்கொடுத்து (எம்ழூரில் இதை பெண்டாட்டி தாசன் என்பர்) காலத்தை ஓட்டுவர் அல்லது மனைவி அதிகம் விட்டுக்குடுத்தோ பயந்து அடங்கி நடந்தோ (இதைத்தான் சிதம்பர ராட்சியம் என்பர்) 10 என்ன 50 ஆண்டுகளைக்களிப்பர். எங்கேயோ ஒரு சில ரத்தினங்கள் மாத்திரம் வாழ்க்கையை வரலாராக வாழ்ந்து காடடுகின்றனர். அப்படிப்பட்ட இரு ரத்தினங்களின் நாப்பது ஆண்டு திருமண நிறைவு விழாதான் நேற்று வெகுசிறப்பாக அவர்கள் நண்பர்களால் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட ஒரு வகை நெகிழ்ச்சிதான் என்னை இந்தப்பதிவை எழுத வைத்தது. (நெகிழ்ச்சி என்பது எம்மைப்புகழும்போது மட்டுமல்ல   அது எம்மை ஏதோ ஒரு வகையில் சேர்ந்தவர்களுக்கு என்றால் கூட  ஏற்படும் இல்லையா?)

இது அந்த விழாக் கதாநாயகர்கள் அறிவுக்கெட்டாமல் இரகசியமாக ஒழுங்கு செய்யபட்ட விழா, இன்னொரு நண்பரின் திருமண விழாவாக இவர்களுக்கான அழைப்பிதல் அனுப்பப்பட்து, உறவினர்கள் எனும் வகையில் நாமும் அழைக்கப்பட்டோம். பல தரப்பட்ட நண்பர்கள் இவர்கள் துறைசார்ந்த நண்பர்கள், அந்தப்பிரதேச தமிழ்ச்சங்கத்தில் அறிமுகமானவர்கள், அவர்களைப்போல் ஆன்மீக ஈடுபாட்டோடு இணைந்த நண்பர்கள் என்று பலரும் குறைந்தது இரு நூறு பேர்வரை கூடி இருந்தனர், இப்படிப்பட்ட நல்லவர்களின் உரிமைக்குரியவர்கள் நாம் தான் என்ற கர்வத்தில் இருந்தோமோ என்னவோ, இவர்களுக்கெல்லாம் இவர்கள் அன்புடையர்களென்னும் போது எமக்கே ஒரு வகை பெறாமை உணர்வை ஏற்படுத்தியிருந்தது அந்த மக்கள் தொகை.

நாம் ஒவ்வொருவரும் அவர்களை வரவேற்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறோம். எம் எல்லோருக்கும் 6.30pm மணி என அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அவர்களுக்கு 7.00 pm என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதனால் 7 மணியில் இருந்து எந்தநேரமும் அவர்கள் உள்ளே வரலாம் என எதிர்பார்ககப்பட்டது… இதோ வந்து விட்டார்கள்!வாசலில் சம்பிரதாயப்படி நிறைகுடம் வைத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன அதன் பின் அவர்கள் உள்ளே வரவளைக்கப்பட்டார்கள். இருவரும் நீர் நிரம்பிய கண்களோடு ஒவ்வெரு முகமாக ஆனந்த அதிர்ச்சியோடு ஆராய்கிறார்கள் ஒவ்வொருவரையும் காணும் போது கண்களாலேயே “நீங்களுமா” “உங்களுக்கெப்படி” என்ற கேள்வித்தொனிகள் தென்பட்டன. ஏனென்றால் அங்கு கூடியிருந்தவர்களில் பலர் 100, 200 மயில்கள் தாண்டி வந்தவர்கள் (இவர்கள் அன்புக்கு இம் மயில்க் கணக்குகள் எம்மாத்திரம்?).

இப்போது வரவேற்புரை விழா ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரால் வழங்கப்பட்டது வளமை போல் முற்பகுதியில் அனைத்துத்தரப்பினரையும் குறிப்பிட்டு வரவேற்றார் அதன் பின் கூறுகையில் ” இவர்களைச்சேர்ந்தவர்கள் எனும் வகையில் உங்கள் ஒவ்வெருவருடைய வாழ்ககையும் நன்றாகவே இருக்கும் அதில் எனக்கு சந்தேகம் இல்லை ….” அது நூறு விகிதம் உண்மைதான். இவர்கள் வார்த்தையால் மற்றவர்க்கு அறிவுரை கூறியது இல்லை தாம் வாழும் முறையால் மற்றவரையும் நெறிப்படுத்துபவர்கள். அதனைத்தொடர்ந்து பலவகையான நிகழ்வுகள் நடைபெற்றன பலர் உரையாற்றினர், பாடல்கள் பாடினர், கவிதைகள் கூறப்பட்டன, நடன நிகழ்வுகள் கூட இடம்பெற்றன. இது ஊரில் வளமைபோல் நடைபெறும் பணி ஓய்வுபெறும் நிகழ்வையோ மணிவிழாக்களையோ ஞாபகப்படித்தியிருந்தாலும் கூட இது சிறப்பில் ஓங்கி நிற்பதாகவே எனக்குப்பட்டது. பாரபட்சம் பாராது பல வேறு பட்ட மக்கள் ஒரு குடும்ப உறவுகள் போல் கூடி உறவாடிய அனுபவம் ஒரு புது வித இனிமையான அனுபவமாகவே எனக்குத்தோன்றியது. கவிதைகளில் வாழ்த்தி உரைத்தவர்கள் அவர்களை “அம்மா, அப்பா என்றனர் அனரி அங்கிள் என்றனர், சேர் மெடம் எனறனர், பாட்டி பாட்டா என்றனர் இப்போதுதான் இரத்த உறவு இல்லாவிடில் கூட அன்பினால் உறவாக முடியும் என்று என்னால் உணர முடிந்தது. மூன்று வயதே நிரம்பிய சிறுமி ஒருத்தி மழலையில் கவிதை சொன்னால்
“எமக்குப் பாட்டா பாட்டடியே
உற்றவர்க்கு நல்லவரே
ஊருக்கு வைத்தியரே
உம்மைப்போல் நாம் உயர
என்னும் நூராண்டிருந்து
நல்ல வழி காட்டிடுவீர்”

உறவுகள் பல உள்ளன்போடு வாழ்ததுரைத்தன அவற்றில் மனதில் பதிந்தவைசில உங்களுக்காய்.

தாய் தந்தை பிரிந்து பிற நாடு வந்த எங்களுக்கு
தாயாகித் தந்தையாகி வழிகாடடும் நல்லவரே
குறை ஒன்று வந்தபோது கூப்பிட நீரிருக்கீர்
சபை என்று வந்த போது சிறப்பிக்க நீர் வருவீர்
குறை என்று சொன்ன – அந்த உறவு தூரம் ஆன துயர்
மறைந்தெங்கோ போனதென்றால்;
உங்கள் மனம் நிறைந்த அன்புதானோ…!

ழூத்தவராய் நீர் எமக்கு வாய்த்ததொரு வரம் தானோ?
அன்பினால் இணைந்த அத்தானும் உன்னைப்போல்
ஆனதொரு பாக்கியமே…
பல்லாண்டு பல்லாண்டு நிறைவுபெற்று வாழியவே…!

அன்பிற்குரியோரை – அதிலும்
அறிவிலும் அகவையிலும் அனுபவத்திலும்
முதியோரை வாழத்;துதல் என்பது
ஒருவகை இன்பம்

அவ்வாரே!
பெரியோரின் ஆசிதனை – ஒரு
நன்நாளில் வேண்டி நிற்பதும்
தனி இன்பம்
இன்று இளையோர் நாம்
ஒன்றிணைந்து, உங்கள் இருவரையும்
அன்பினால் வாழ்த்துகிறோம ……

என்று வாழ்த்துரைகள் நீண்டுகொண்டே போனது.
இவர்களின் அதீத அன்பின் வெளிப்பாடோ என்னவோ நம் இனத்துக்கே இயல்பாக இருக்கு வெளிப்படையாகயாரையும் பாராட்டத்தயங்கும் குணம் எங்கோ ஓடி விட்டது. இவர்களின் வாழ்க்கையின் நிறைவை அங்கிருந்த கூட்டம் முன்மொழிந்தது என்று சொன்னால் அது மிகையாகிவிடாது.

திருமண உறவில் எமக்குக்கிடைத்த உறவே எம்மை முழுமை பெறச்செய்யும் என்பதை முதியோர்கள் சும்மா சொல்லிவிட்டுப்போகவில்லை. மனம் நிறைந்த உதவும்,  அன்போடிருக்கும்  குணத்துக்கு ஏற்ப அவருக்கான திருமண பந்தம் அமைந்தால் மட்டுமே அவரால் அதற்காக உளைக்கமுடியும் அல்லவா. இப்படிப்ட்ட தன்னலமற்ற செயல்களுக்கு இவர்களுக்குள் எப்படிப்பட்ட விட்டுக்கோடுப்பு இருந்திருக்கவேண்டும்.

இவர்கள் எப்போதும் முழுநேர உத்தியோகத்தர்களாக இருந்தும் கூட இவர்களிடம் இருந்த மற்றவர்களுக்கு உதவும் குணமும் எல்லா உறவுகளையும் இணைத்துக்கொள்ளும் சக்தியும் ஆன்மீகத்திலிருக்கும் அதீத ஈடுபாடும் விருந்தோம்பலும் எம்மெல்லோரையும் ஆச்சரியப்படுத்து வதோடு மட்டுமல்லாமல் எமக்கான வாழ்க்கை குருக்களாக மானசீகமாக நினைத்துக்கொள்ளவும் வைத்துவிட்டது.

இன்னும் சில படிப்பினைகளாக அவர்களிடம் பெற்ற சிறு குறிப்புக்களை உங்களுக்கும் இங்கே இட்டு வைக்கிறேன்.
40 ஆண்டுகளுக்குமேல் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் கூட பிற கலாச்சாரங்களின் மேல் எந்தவகை ஈர்ப்பையும் கொள்ளாது இப்போதும் நம் ஊர் மாமியார்கள் போலவே எப்போதும் ஒரு எட்டுமுள புடவையில் தெரியும்  மனைவி, வீட்டில் எப்போதும் இரு வேளை கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபடும் இவர்கள் பக்தி, காலையில் கணவனை வளிபட்ட பின் வேலையைத் தொடங்கும் பண்பாடு, மனைவிக்கு மச்சம் பிடிக்கேல்ல கொஞ்சனாளிலை எனக்கும் பிடிக்கேல்லை என்ற ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழ்வதற்கான விட்டுக்கொடுப்பு. இவை யெல்லாம் எமக்கு பல இலக்கியங்கள் தந்துவிட முடியாத உந்துதல், பாடம். காலத்தையும் நாகரிகத்தையும் வாழும் இடத்தையும் சாட்டாகச்சொல்லி நம் பண்பாட்டை வாழ்க்கை முறையைத்தொலைத்துக்கொண்டிருக்கும் எமக்குக்கிடைத்த வாழும் வழிகாட்டிகள். திருமணபந்தமென்பது தேதிகுறித்து விழாநடத்தி விணாப்போவதே என்று வீம்புபேசுபர்களுக்கு எட்டவேண்டிய உண்மைக் கதை.

“ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.” – திருவள்ளுவர்
(- மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.)

திசைமாறிப்போகும் திருமணபந்தங்களின் எண்ணிக்கையைக்கண்டு மலைத்துப்போகும் நாம் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களைப்பற்றிய இக்குறிப்பை மற்றவரோடும் பகிர்ந்து கொள்ளல் நல்லதல்லவா?  பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்க்கு பயனுள்ளதென்று நீங்கள் நினைத்தால்.
நன்றி உங்களுக்கும் இந்தக்குறிப்பின் கதாநாயகர்களுக்கும்.

Advertisements

2 thoughts on “புனிதமாகும் திருமணவாழ்க்கை

  1. menu says:

    Very good, But need to care about proof reading.

  2. Shaliny says:

    திருமணபந்தமென்பது தேதிகுறித்து விழாநடத்தி விணாப்போவதே என்று வீம்புபேசுபர்களுக்கு எட்டவேண்டிய உண்மைக் கதை.
    Nanraha sonnerhal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s