நம்ம தோட்டத்து முல்லை மல்லிகை


அது என்னவோ தெரியேல்லை  மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை மட்டுமே மணக்க நம்ம மூக்கையெல்லாம் சந்ததி சந்ததியா பழக்கிப்போட்டினம். எங்கவீட்டு முற்றத்திலை கொத்துக்கொத்தா பூத்துக்குலுங்கி பறிக்க ஆளில்லாமல் கிடைக்கிற முல்லமல்லிகையை நாங்க கண்டுக்கிறதே இல்லை அப்படி பூத்துக்குலுங்கின ஒரு நம்ம தோட்டத்து முல்லைமல்லிகையை முகரக்கிடைச்ச ஒருசில அதிஷ்ரசாலிகளிலை நானும் ஒருத்தியாப்போனதிலை எனக்கு அப்படி ஒரு சந்தோஷம், அப்படி ஒரு ஆச்சரியம் கர்நாட சங்கீதம் பற்றி தேடித்தேடி ஆரயிர எனக்கே தொரியாமல் இப்படி ஒரு கலைஞரை எப்படி எம் மக்கள் ஒளித்து வைத்திருந்தார்களோ அது யாழ்ப்பாண மண்ணுக்குத்தான் தெரியும்….

Dr  ஹீ. தாஷனன் இசை முது விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்…. கம்பீரமான   கணீர் என்ற குரல்   தமிழுக்கு இப்படியொரு அழகிருக்கின்றது என்று இவர்குரல் எடுத்துக்காட்டியது… எனக்குக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பார்வையாளர்களின் தன்மை கருதி முழுக்க முழுக்க அவை கர்நாடக சங்கீதத்தில் மூழ்கியவையாய் இல்லாதிருந்தாலும் கூட இவை எனக்கு நல்லூர்த்திருவிழாவில் கிடைக்கும் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் கிடைத்த இனிய அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்தியது.

எம்மவர்களால் நடாத்தப்படும் இசை நிகழ்வுகளில் அரங்கேறும் உன்னிக்கிருஷ்னன், நித்தியஹீ போன்ற இந்தியக்கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு இருபது பவுண்களைச் செலவழித்தும் இறுதி வரிசையில் உக்கார்ந்து பார்க்கும் எமக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது பாக்கியமாக உணர்ந்ததோடு எம் இலங்கைமக்களின் அறியாமையை நினைத்து வேதனையாகவும் இருந்தது.
இந்த சங்கீத வித்துவான் தர்ஷனன் அவர்கள் இலண்டனில் பல ஆலயங்களில் எம்மைப்போல ஒருசில பக்தர்களின் விருப்பத்துக்கிணங்க கச்சேரிகளை நடத்தியிருந்தார் இவரைப்பற்றி ஒரு பெரியவர் கூறுகையில் “காலங்காலமாக  இந்துமதம் சம்பந்தர் அப்பர்போன்ற இசைக்கலைஞர்களாலும் கவிஞர்களாலுமே காப்பற்றப்பட்டும் பரப்பப்ட்டும் வந்தது. இப்போதும் கூட எம்மவரகளிடையே இசைஞானம் திசைமாறிப்போகுகையில் இவர் போன்ற கலைஞானமுடையவர்களின் சேவை இன்றியமையாததாக நிற்கின்றது… இவர்போன்ற கலைஞர்களை மற்றவர்களுக்கும் இனம்காட்டி உரிய அங்கீகாரம் தேடிக்கொடுப்பது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்” என்று கூறினார்…

அங்கு இவரால் பக்திப்பாடல்கள் அடங்கிய மூன்று இசைத்திரட்டுகள் வெளியிடப்ப்ட்டன ஒவ்வொன்றும் அருமையானவை அதில் பஞசபுராணத்திரட்டு எங்கள் வீட்டில் எப்போதுமே ஒலித்தபடி இருக்கும்.

என்னைப்போன்ற பலரது வேண்டுகோள் என்னவெனில் இவர் இன்னும் பல இசைத்தட்டுக்களை வெளியிட்டு குறிப்பாக வீரமணி ஜ்யரின் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கள் கொண்ட பாடல்களை வெளியிட்டு அதை விஸ்தாரமான முறையில் விளம்ப்படுத்தி எம் ஒவ்வொருவர் கைகளிலும் கிடைக்கச்செய்யவேண்டும்

நாளைய எங்கள் அரங்குகளில் இவர்போன்ற ஈழத்துக் கலைஞர்களின் பெயர்களும் இந்தியக்கலைஞகர்களுக்கு நிகராக ஒலிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுவதில் எந்த தகுதியின்மையும் இருப்பதாக நான் நினைக்கவில்ல….!

Advertisements

10 thoughts on “நம்ம தோட்டத்து முல்லை மல்லிகை

 1. அழகான சாரீரம் .. இவர் ஒருமுறை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் “நீ பௌர்ணமி” பாடலை அருமையாக பாடியிருந்தார். நல்ல பதிவு.

 2. நன்றி ஜேகே….! ஆமாம் இவர் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கேள்விப்பட்டேன். ஆனால் பார்க்கக் கிடைக்கவில்லை!

 3. “கல்யாண வசந்த மண்டபத்தில் ” என்று ஒரு பாடலை பாடியிருந்தார் அவர் குரல் அப்படியே உணர்வுகளைக்கொட்டியது… என்ன இனிமை அதை பதிவுசெய்ய வேண்டும் என்ற சிந்தனைகூட இல்லாமல் ரசித்துவிட்டேன் அதனால் அதை இங்கே தரமுடியவில்லை.

 4. Dr.S. Darshanan says:

  உங்களுள் ஒருவனை ஊக்குவிப்பதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து, மனம் திறந்து பேசுகின்றமை என் கண்களில் நீர் சுரக்க வைக்கின்றது.

  • ஒரு நல்ல கலைஞனை ஊக்குவிப்பதைத்தவிர ரசிகர்களால் வேறு என்ன வெகுமதியைத்தந்துவிட முடியும். நன்றி உங்கள் வருகைக்கும் பதிலுக்கும்

 5. நா.சடகோபன் says:

  அன்பர் தர்ஷணன் அவர்கள் குரல் வளம் அற்புதமாக இருக்கிறது. “தாமரை இலையில் நான் எழுதிய காதல்” பாடலை அவர் பாடியுள்ளது காதில் ரீங்காரமிடுகிறது. அவர் போன்றவர்கள் சென்னைக்கு வந்து இசை விழாக்களில் கலந்து கொண்டு பாடிட முன்வரவேண்டும்.

  நா.சடகோபன்

  • சரியாகச் சொன்னீர்கள் நா.சடகோபன்! கலை அங்குமிங்குமாக பகிரப்படும்போது அது இன்னும் மெருகேறும்…!
   நன்றி உங்கள் கருத்திற்கு!

 6. நன்றி தர்ஷணன் அவர்கள் பற்றிய தகவல்களைத் தந்ததற்கு. வீடியோவில்தான் கேட்டேன் இப்பொழுது. மிகச் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தர்ஷணன்.

 7. உண்மைதான் அருமையான பாடகர்.
  நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் Dr.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s