என்னைப் பற்றி

என் கணணி முகப்பு என்னமும் என்னைப்பற்றி முழுதாக அறிந்து கொள்ளாதவள்.
மற்றவர்களைப்பற்றி அறிந்து கொள்ளத் துடிப்பவள்.
எல்லோரும் என்னை  புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவள்.
<< 2007 இல் என்னை மறக்கவைத்த என் கணணியின் முகப்பு

இருட்டடிப்புக்களுக்குள்ளும் இடமபெயர்வுகளுக்குள்ளும்
தொலைந்து போன எம் முகவரிகளைத் தேடுபவர்கள் நாம்
இப்போது இணையத்திலாவது எமக்கென்று ஒரு
நிரந்தர முத்திரையிடத் துடிக்கிறோம்

ஆனால் எப்போதும் ஒழிந்து வாழ வேண்டியவர்கள்
இங்கே அதன் தேவையில்லை என்றபோது – இங்கே
ஊற்றாய் உணர்வுகளைக் கொட்டி விடலாமா என்று தோன்றுகிறது……
இது இணையம் தேடு வதற்கு யாரும் இல்லை – காட்டிக்கொடுத்துவிட
யாருக்கும் தேவையில்லை –
கைது என்று சொல்லிக்களு ஏத்திவிட யாருக்கும் தகுதி இல்லை

வாருங்கள் இங்கே ஒன்று கூடலாம்
முகம்தெரியாமல் முகவரியைப்பற்றிக கவலை இல்லாமல்
எது வேண்டுமானாலும் பேசலாம் – எம்மில் தோன்றியதை எப்படியும் பேசலம்
யாரையும் திட்டி விடலாம்
அரசியல் வாதி என்ன ஆயுததாரி என்ன அரசாங்கம் என்ன…….
முகமில்லாத இந்த இணைய முகவரியை இவர்கள் என் செய்துவிடமுடியும்

நன்றி வல்வைத் தென்றல்

6 thoughts on “என்னைப் பற்றி

  1. barthee says:

    உங்களை கொஞ்சம் அறிமுகப்படுத்துவீர்களா?

    • வல்வைத் தென்றல் says:

      வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு வளமான பச்சைநிறமான கிராமத்தைச்சேர்ந்தவள்….. நிச்சயமாக எப்படி அறிமுகப்படுத்துவது என்பது தெரியவில்லை….
      அறிமுகம் தேவையில்லாத ஒரு இடம் இணையம் அதை அனுபவிக்கவிடுங்கள் பிளீஸ்

      • barthee says:

        இணைய உலாவிகள் சந்தையில் சாமான் வாங்குபவர்கள். இன்று நானும் நீங்களும், நாளை இன்னுமொருவரின் இணையம் அவர்களின் உறைவிடம்!
        ஆனால்,
        உங்களைப்போல் படைப்பாளிகள் பேணிப்போற்றவேண்டிய சிற்பிகள்… ஏன் விதைகள் என்றும் சொல்லலாம்!!

        உலாவிகளுக்கு உங்கள் அறிமுகம் தேவையில்லை என்று எடுத்துக்கொண்டாலும், உங்கள் சாயலில் உள்ள இன்னுமொரு படைப்பாளிக்கு உங்கள் அறிமுகம் நிச்சயம் தேவை என்பது கற்ற உலகம் உரைக்கும்.
        எனவே எனக்குமட்டும் ….. காதுக்குள் … பிளீஸ்

  2. வல்வைத் தென்றல் says:

    // உங்களைப்போல் படைப்பாளிகள் பேணிப்போற்றவேண்டிய சிற்பிகள் //
    கொஞ்சம் அதிகமாகத்தான் புளுகுரீங்க..
    நன்றி உங்கள் ஆவலுக்கு …
    என்பெயர் தமிழினி இடம் கம்பர்மலை…! நிச்சயமாக உங்களுக்கு என்னைத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    ஆனாலும் இன்று முதல் அறிமுகமாகலாம் நண்பர்களாய்.
    மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கு….
    உங்கள் இணையத்திற்கு நான் புதியவள் அல்ல…
    பலமுறை வருகைதந்திருக்கிறேன்.
    தொடர்ந்து பாருங்கள் பக்கங்களை, பிடித்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களோடு. .

  3. வணக்கம் தமிழினி. எனக்கும் உங்களை தெரியவில்லை. என்னை உங்களுக்கு தெரியுமா? எனது பாடலை விரும்பி இருந்தீங்கள். நன்றிகள் தொடர்ந்தும் என் பக்கங்களுக்கு வாருங்கள். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். முடிந்தால் உங்களை இன்னமும் தெளிவாக எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.

    • இல்லை நண்பரே எனக்கும் உங்களைத்தெரியவில்லை… இணையம் என்னை உங்களுக்கு அறிமுகப்படித்தியது. நன்றி உங்கள் வருகைக்கு…. நிச்சயமாக தொடர்ந்து உங்கள் இணையத்தோடு இணைந்திருப்பேன்

Leave a reply to வல்வைத் தென்றல் Cancel reply