இன்றைய கவிதை


விடியப்போகும் வருடமே!

நிஜங்களின் பிரதி பலிப்பின் மேல் நம்பிக்கைவைக்காமல்
கற்பனைகளின் கண்துடைப்புகள் மேல் நப்பாசை வைத்தவர்க்கு
விடியப்போகும் வருடமே என்ன சொல்லப் போகிறாய்?

_____________________________________________________________
என் வாழ்வின் எல்லைவரை
எதைக் கொண்டு போக நினைக்கிறேனோ – அது
என் கைக் கெட்டாத கனியாகி விடுமோ என்றுதான்
கண்கள் கண்ணீர் செய்ய முயற்சிக்கின்றன
ஆனாலும்………………..
ஒரு நேரம் வந்தால்…
என் குருட்டு விம்பங்களிலும்
ஒளி வெள்ளம் பாய்ந்து வந்தால்…
எனக்கான வசந்த சோலை
என் முன்னேயே வந்து நின்றால்…
நிழலாடிக் கொண்டிருக்கும்
நிகழ்ச்சிச் சித்திரங்கள் என்
வாழ்க்கைத்திரையில் அரங்கேறிவிட்டால்….
இவை எல்லாமே……..?
இல்லையென்று ஆகிவிடக்கூடும் என்று தெரிந்தும் கூட
அந்த கற்பனை நாளை எண்ணி
வாழ்வை கடந்துவேன்!!

Advertisements

தென்றலின் வருகை


என் பள்ளிநாட்ளின் பசுமை நினைவுகளின் ஒரு மணித்துளி!!!!

மாணவர் எழுச்சி நாள் 6.5.96
ஒரு கவியரங்கத்தில் பங்கேற்ற வன்னி சகோதரி ஒருவருக்காக எழுதியது

மாணவரே உலகின் மாணிக்கங்கள்
மாணவராய் எமையெல்லாம் ஆக்கிவிட
அயராது உழைத்திடும் அத்தனை ஆசான்களுக்கும்
அன்பான வந்தனங்கள்
சினமடையாமல் சீறிவிழாமல் சிறந்த குணங்களைச் சிதரவிடாமல்
சிறப்பாக நாம் வாழ வழிகாட’டும் ஆசான்களுக்கு
சிறப்பான வணக்கங்கள்

கவிக்களம் தனிலே பிடித்ததைப் பிரசுரிக்க
களங்கமின்றி வந்த எமக்கு கருணைபுரிவாய் கல்வித் தாயே!
மாணிக்கங்களாய் மற்றவர் மதித்திடும் மாணவர் நாம்
நல்லவை மட்டும்மே நம் செவிகள் பார்த்திடுமே
இனியவை இருந்தாவே எம் விழிகள் ரசித்திடுமே
இன்பந்தரும் இன்மெழிகள் மடடும் இதமாக வாய் பேசிடுமே

வருங்கால வாழ்வுக்கட்டிடத்தின் அத’திவாரங்கள் நாமன்றோ?
இன்றைய மாணவனே உயிரையே காத்திடும் வைத்தியனாய்
வருங்கால மாணவரின் வழிகாட்டியாயும் – ஏன்
இன்றைய சந்திரிக்காவைப்போல் நாடையும் ஆழக்கூடும் – ஆம்!
இன்றைய மாணவநே நாழைய வரலாறு…

வீடிளந்து ஊரிழந்து வேதனைகள் தான் சுமந்து
சோதனைகள் சுழ்ந்ததனால் சோகத்தில் மூழ்கிவிட்ட சோதரரே
பேருக்கு மடடும் பேனாவோடலைந்து
போரப்பற்றியே பொழுதெல்லாம் நினைந்துகொண்டு
பேயறைந்து நிற்கும் என் சகமாணவரே
யாருக்குத்தெரியும் உங்கள் ஊருக்குள் ஆமி வரும் எண்டு
சாமியை வேண்டிக்கொள்ளும் சத்தியமாய் ஊர் போவீர்…
நீங்கள் வீடு செல்லும் போது வெறும் கையோடு செல்ல வன்னியர் நாம் அனுமதியோம்!
வாருங்கள் ஒன்றாக கல்விக்கடல் தான் கடந்து கல்விமானாய் உம்மொவ்வருவரையும் நாம் வழியனுப்ப….

பெற்றோரைப் போரினிலே விட்டவரே
பெற்றுக்கோள்வீர் அளவில்லா கருணைதனை எம்
அன்பு நிறை ஆசான்களூடே

விட்டு வந்த நட்பையெல்லாம் தொடர்ந்திவிட நாமுள்ளோம்
வெண்று விட வாருங்கள் வேதனைக் தள்ளிவிட்டு

மிச்முள்ள தெசத்தோடு மீதமுள்ள நாம் சேர்ந்து
கட்டிடலாம் ஈழதேசம் கண்டிடலாம் தமிழீழம்

என் நேரம் எப்போ நகர்ந்ததனால்
விடை பெறுகிறேன் நன்றியுடன்.
____________________________________________________________________________
சரஸ’வதி பூஜை (1995 புதுக்குடியிருப்பு மகாவித்யாலயம்)
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து   மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட கவியரங்கின் என் பங்கு

அரியாசனத்தில் அரசரோரெம்மை
சரியாசனம் வைத்த தாயே
சகல கலா வல்லியே

யாழ் மண்ணில் வணங்கிய அடியேன்
வன்னி மண்ணில் அகதியாய்
வழிபடுகின்றேன் வணக்கம்
முத்தமிழ் வளர்க்கும் இத்தரை மீதினில்
எத்தனை முகங்களோ அத்தனை பேருக்கும் எம் வந்தனங்கள்

நாவினுள் அருளும் கலைமகளாய்
நற்துணை புரிந்திடுவாய் தேவி
என்னவளே! கலைவாணியே!
உன்துணையால் உன்னவர்நாம்
உன் புகழைப் பாடிடவே
உன்முன்னே வந்துள்ளோம் துணை தருவாய் நியே!

தேவி!
நாவில் வருவதை நயமாகச் சொல்லிடவே
கவிச்சரம் தொடுத்துன் பாதம் தனைப் பணிந்திடவே
பாங்காக வந்து நிற்கும் உன் அடியாரை- இம்
முன்றலில் எம்மிலும் மேலான கல்விமான்கள்
குறை கண்டு இளிந்திடவும்
நிறை கண்டு புகழ்ந்திடவும்
பொறுமையுடன் காத்திருக்கும் – சக
மாணவர் முன் எளிமையாகக் காத்திடம்மா

கல்வியெனும் கடலதனை நீந்தி முடிப்பதற்கு
கண்கலங்கிக் கதி கலங்கி வழியின்றித் தவிக்கும் – உன்
செல்வக் குழந்தைகளைச் செம்மையாகக் காத்திடம்மா
நாவுக்கரசி சரஸ்வதியே நாவில் வந்து  உறைந்திடம்மா….

நெஞ்சத்து ஒளியை மறைப்பது போல்
உன்னருள் நிறம்பிய தேசததையும் – நாம்
தவிக்க விட்டு வந்தோமம்மா
ஆம்! நாம்
உன்னருளும் பெறவே தினமும் பாடுபட்ட
எத்தனை ஆசான்கள் – எத்தனை மாணவர்கள்
அரக்கரின் அழிவினிலே அழிந்தனரம்மா
நீதான் கலை வாணி என்று அறிமுகம் செய்தும்
“அ” வும் “அம்மாவும்” அன்பாகச் சொல்லித்தந்த
எங்கள் அன்பான ஆசான்களெங்கே
ஆம் பிரிவென்ற துயரம் எம் நெஞ்சை அடைக்கிறது
ஆனாலும்!
புதிய முகங்களின்று
புதுவாழ்வு தருவது போல்
இன்முகமாய் வந்து நிற்கும்
புதிய ஆசான்களால்
நாவுக்கரசி சரஸ்வதியே
நாவில் வந்து உறைந்திடம்மா!

காலையிலே கடலையவல்
உண்டகளை உங்களுக்கும்
ஆனால்! எங்கள் துயர் ஏராளம்
ஒருகாலை புகுந்தனரே எங்களூரில் ஆமி – நாங்கள்
உள்ளதெல்லாம் இழந்து விட்டு
ஓடி வந்தோம் தாயே

காலையிலே கடலையவல்
உண்டகளை உங்களுக்கும்
ஆனால்! எங்கள் துயர் ஏராளம்
ஒருகாலை புகுந்தனரே எங்களூரில் ஆமி – நாங்கள்
உள்ளதெல்லாம் இழந்து விட்டு
ஓடி வந்தோம் தாயே

தளராத வேங்கைகளால்
உருவாகும் தேசத்தை
மணம் பரப்பு மலர் போன்று
மணி மணியாய்க் காத்திடவே
கல்வியென்ற கரும்பும்
தேவையென்று உணர்ந்தோம் தேவி!
நாவுக் கரசி சரஸவதியே நாவில் வந்து உறைந்திடம்மா!

என்னுரை முடிந்ததென்று
பெருமூச்சு விடுவோர்க்கும்
அப்பாட போடுவோர்க்கும்
ஒரு வணக்கம் கூறி
நன்றியுடன் நழுவுகிறேன்

__________________________________________________