சட்டுப்புட்டு சமையல்


நீண்ட நாளுக்கப்புறம்…நிறையநாள் விடுமுறை நம்மை படு சோம்போறி ஆக்கீற்றுது. நிறைய எழுதோனும் போல இருக்கும் ஆனா நேரம் கிடைக்கிறதில்லை சீ சீ நேரத்தை நான் என்ரை புளக்குக்கு ஒதுக்கிறதில்லை. இன்டைக்கு நான் எழுதிறதை நீங்கபடிக்கிறீங்களோ இல்லையோ இதை இப்ப நான் எழுதினா நாளைக்கு எனக்கே உதவும் எண்டிட்டு எழுதிறன்.

முதலில் மற்றவையை வழைச்சுப்போட நம்ம பொண்ணுங்க பயன்படுத்திற ஆயுதம் – சமையல்….!

நம்ம வீட்டுச்சமையல் எப்பவும் சட்டுப்புட்டுத்தான். “வேலையால வந்தநேரம் தொடக்கம் ஏன் கிச்சினுக்க கிடக்கிறாய், சட்டுப்புட்டென்டு ஒரு கறியச்செய்தா ஏதோ ரொட்டியோடையோ பானேடையோ சாப்பிடலாம் தானே. சும்ம ஏதோ சாப்பிட்டிட்டு பிள்ளையோட மினக்கடிறதை விட்டிட்டு…” என்று ஈசியாக ஆனா ருசியாக ஏதாவது சமைத்து தரமாட்டளாஎன்டு நினைக்கிற கஷ்பன்டு. “அம்மா வாங்கோ ரோயிங் கீறுவம்” என்று பின்னாலேயே திரியும் பிள்ளை. வேற வளியில்லை ஏதாவது சட்டுப்புட்டு சமையல்தான்.

ஒரு 20 ருசியான சாப்பாட்டு முறையைக்கைவசம் வச்சிருந்தமெண்டாக்காணும். தீடீரென விசிற்றஸ் வந்தாக்கூட ஈசியா அசத்தி “தமிழினிக்கு நல்லா சமைக்கத்தெரியும்” எண்டு பேரும் வாங்கிடலாம். சரி நீட்டிமுளங்கி நேரத்தை வேஸ்ராக்காமை விசையத்துக்கு வாறன்.

கோழி மரக்கறி கூட்டுக்கறி

இது என்னோட ஓன் தயாரிப்பு. நம்ம வீடுமாதிரி மரக்கறிகளை கொஞ்சம் தள்ளிவக்கிர மனிசர்கள் இருக்கிற இடத்துக்கு இது நல்ல உணவு. நல்ல சத்துள்ள மச்சவாடை அடிக்கிற உணவு 🙂
ஒரு 250g சிக்கின், அரைத்த இஞ்சி உள்ளி, உப்பு, கொஞ்சம் தேசிப்புளி, வெங்காயம் கொஞ்சம் அதிகமா போடலாம, கறுவா ஏலக்காய் விருப்பமெண்டா போடுங்க, எலலாவகையான மரக்கரி தேவையான அளவு (கத்தரிக்காய் , தக்காளி, கோளிபிளவர், போஞ்சி, ஆசனிப், பாசனிப், முள்ளங்கி, ஊருளைக்கிழங்கு, சுவீட்பொட்டட்டோ, ஸ்பிரிங் ஒனியன் என்ன மரக்கறி வேணுமெண்டாலும் போடலாம்), தேவையான அளவு கறித்தூள்.
இவற்றை நன்றாகக்கலந்து ஒரு டிஸ்ஸில் போட்டு பொயிலால் முடி அவுனுக்குள் வைத்துவிடுங்கள் மொத்தமாக 1 மணிநேரம் வைத்தால் போதுமாக இருக்கும் இடையில் இரண்டுதடவை வெளியே எடுத்துக்கிண்டி விடுங்கள் அவ்வளவுதான் சமையல் ரெடி இதை நீங்கள் எந்தவகையான உணவுக்கும் கூட்டாகப்பாவிக்கமுடியும் ரொட்டி, பரோட்டா, பாண், சோறு, பிட்டு, இடியப்பம்…. அவுன் வசதி இல்லதவர்கள் அடுப்பில் ஒரளவு லோகீற்றில் வைத்து சமைக்கமுடியும்.

மிச்சத்துக்கு நெக்ஸ்ற்வீக் வாங்க பிளீஸ்
(புதுசா கண்டுபிடிக்க டைம் குடுங்கப்பா)

15 May 2012

கடலை சாதம்
“ஒரு ஊரிலை ஒரு ராஜா இருந்தாராம் அவர் ஒருநாள் காட்டுவளியால நடந்துபோகேக்கை ஒரு பள்ளத்துக்க மாறிக் காலை வைச்சிட்டராம் ராஜா ஆ எண்டிக்கொண்டு ” எண்டு கதைசொல்லி ஆக்காட்டவைச்சு சாப்பாடு தீத்திறை நம்மளமாதிரி அம்மாமாருக்குத்தான் தெரியும் சமைச்சு அதை குட்டீசுக்கு ஊட்டிறதிந்தை கஷ்ரம். ஒருவாயிலை பத்து வாய்சாப்பாட்டிண்டை சத்தைக் குடுத்தாத்தான் நாலு வாயிலை காணுமெண்டு தலையாட்டிறதுகளை ஒரு ஆரோக்கியமானதுகளா வளக்கமுடியும்.
இபப்டி தேடித்தேடி சமைச்சதிலை (கண்டுபிடிச்ச) நான் கண்டுபிடிச்சதெண்டு நினைச்ச பாகிஸ்தான் காரருடைய கடலை சாதத்தைப்பற்றி உங்களோட பகிரப்போறன்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் (மிகச்சிறிய துண்டாக வெட்டப்பட்டவை) – 2 பெரிய வெங்காயம்
கருவேப்பிலை (மிகச்சுறிய துண்டாக பிக்கப்பட்டவை) – 6 , 7 இலைகள்
பச்சமுளகாய் (மிகச்சிறய துண்டாக வெட்டப்பட்டவை ) – 2 (உங்கள் சுவைக்கேற்ப கூட்டடிக்குறைக்கலாம்)
வடித்தெடுக்ப்பட்ட சாதம் (அவிந்த) – 1 சுண்டு
அவிக்கப்பட்ட கடலை – அரை சுண்டு (கொள்கலனில் பதப்படுத்தப்பட்ட கடலையை நீங்கள் அப்படியே பாவிக்கலாம்)
கடுகு சிறிதளவு
சின்னச்சீரகம் கொஞசம் அதிகளவு (இதுதான் சாத்தின் சுவையைக் கூட்டும்) – அதற்காக அதிகம் போட்டுவிடாதீர்கள்
உப்பு சிறிதளவு
பட்டர் / நெய் /எண்ணை

இப்போது செய்முறைக்கு வருவோம்  get set ready go……..

எரியும் அடுப்பில் சூடேற்றப்பட்ட பாத்திரத்தில் சிறிதளவு பட்டர் / நெய் /எண்ணையை சிறிதளவு இடடுக்கொள்ளுங்கள் அது நன்றாக கொதித்தவுடன் கடிகைப்போட்டு வெடிக்கவிட்டு சின்னச் சீரகத்ததையும் வெங்காயத்தையும் கருவேப்பிலையையும் பச்சமுளகாயையும் கொஞ்சம் உப்பையும் போட்டுக்கொள்ளுங்கள் (நீங்கள் சேர்த்த வெங்காயத்தோடு அளவாக சேரவேண்டிய அளவுமட்டும்) போட்டுக்கொள்ளுங்கள் சிறிது நேரம் தாளிப்பதுபோல் கிண்டி எடுத்து வெங்காயம் பொன்னிரமாக வந்தவுடன் கடலையைக்கொட்டி விடுங்கள். இப்போது அடுப்பின் பிளேமை வெப்பத்தைக் குறைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் அவற்றை மாறி மாறி கிண்டி விட்டுக்கொள்ளுங்கள். பின் சாதத்தையும் பாத்திரத்தில் இட்டு நன்றாக சேரும்படி கிண்டிக்கொள்ளுங்கள் பின் இன்னும் சிறிது பட்டரையோ நெயையோ எண்ணையையோ சேர்த்து நன்றாக சேரும்வரை கிண்டிக்கொள்ளுங்கள். மீண்டும் தெவையான உப்பைப்போட்டு கிண்டிக்கொள்ளுங்கள். சுவைத்துப்பார்த்து சுவைக்கேற்ப உப்பை சேர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் கொஞ்சம் காரப்பிரியராய் இருந்தால் கொஞ்சம் தட்டிய மிளகுதூளைச்சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போ சாதம் ரெடி எங்க வீட்டை கூட்டில்லாமலே சின்னது சாப்பிட்டிடும் பெரியவைக்கு ஏதாவது ஒரு சின்ன கட்டிக்கறி (திக்கான கறி அல்லது பிரட்டல் கறி) வைப்பேன். அவ்வளவுதான்.

சமைச்சுப்பாருங்க சின்னவைக்கு பிடிக்கக்கூடிய அதிகம் உறைப்பில்லாத சுவையான சத்தான உணவு. இதே போல் எங்கள் வீட்டில் பலவகையான சாதம் செய்வேன் போஞ்சி சாதம் – கடலைக்குப்பதில் மிக மிக சிறிதாக வெட்டி எடுக்கப்பட்ட  (அல்லது பூற் புறசசறில் food Processor வெட்டி எடுக்ப்பட்ட போஞ்சி) யை சேர்ப்பதுண்டு. அல்லது பச்சைக்கடலையை (green peas) சேர்ப்பதுண்டு.

Advertisements

புனிதமாகும் திருமணவாழ்க்கை


“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” – திருவள்ளுவர்

கணவன் மனைவி உறவு என்பது ஒரு தவம், காவியம்… என்று எப்படியெல்லாமோ வர்னிக்கலாம் ஆனால் அதை வாழ்க்ககையாக வாழ்ந்தவர்களைக் காண்பது என்பது இப்போது உள்ளசூழலில் மிகவும் அரிது…
நம்மைப்போன்ற பலர் இப்படி நாமும்  வாழவேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதோடு மட்டும் நிறுத்திவிடுகிறோம், சிலர் அவர்கள் வாழ்க்கைமுறையை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொள்கிறோமே தவிர அப்படி நடந்துகொள்ளத் தவறி விடுகிறோம். “நாம் இத்தனையாண்டுகள் ஆயிற்று திருமணம் செய்து” என்று   கூறிக்கொள்பவர்களில் எத்தனை பேர் உண்மையாக ஒருவருக் கொருவர் உள்ளன்போடு வாழ்ந்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே. ஒன்றில் கணவன் அதிகம் விட்டுக்கொடுத்து (எம்ழூரில் இதை பெண்டாட்டி தாசன் என்பர்) காலத்தை ஓட்டுவர் அல்லது மனைவி அதிகம் விட்டுக்குடுத்தோ பயந்து அடங்கி நடந்தோ (இதைத்தான் சிதம்பர ராட்சியம் என்பர்) 10 என்ன 50 ஆண்டுகளைக்களிப்பர். எங்கேயோ ஒரு சில ரத்தினங்கள் மாத்திரம் வாழ்க்கையை வரலாராக வாழ்ந்து காடடுகின்றனர். அப்படிப்பட்ட இரு ரத்தினங்களின் நாப்பது ஆண்டு திருமண நிறைவு விழாதான் நேற்று வெகுசிறப்பாக அவர்கள் நண்பர்களால் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட ஒரு வகை நெகிழ்ச்சிதான் என்னை இந்தப்பதிவை எழுத வைத்தது. (நெகிழ்ச்சி என்பது எம்மைப்புகழும்போது மட்டுமல்ல   அது எம்மை ஏதோ ஒரு வகையில் சேர்ந்தவர்களுக்கு என்றால் கூட  ஏற்படும் இல்லையா?) Continue reading

உதயனின் இரட்டை வேடம் அம்பலம்! பிதற்றும் இணையத்தளங்கள்


http://tamilcnn.com/moreartical.php?newsid=7971&cat=srilanka&sel=current&subcat=2

http://www.northlanka.com/?p=2399

Uthayan - Sri lanka Tamil News paperஅட முட்டாள்களே – இலங்கையில் ஒரு சின்ன தமிழ் கடை வைத்திருப்பவர் கூட இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் சலாம் போட்டால் தான் வேலை நடக்கும் அப்படி இருக்க உதயன் மட்டும் விதிவிலக்கா என்ன…
எமது முப்பது வருட போராட்டகாலத்தில் இவர்களின் சேவையும் அவஸ்தையும் ஈடு கொடுப்பும் உங்களைப் போன்ற முகவரி போடக்கூடத் துணிவில்லாத வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பதற்காக இயங்கும்  இணையத்தளங்களுக்கு எங்கு விழங்கப்போகிறது.
நான் முன்னைய குறிப்பில் கூறியதுபோல் விரிந்தினர்களையும் விழம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களையும் மட்டும் கரித்தில் கொள்ளும் உங்களுக்கு இப்டிப்பட்ட மக்கள் ஊடகங்களின் அருமை எங்கு புரியப்போகிறது?????

செய்தி இணையத்தளங்களுக்கு


இப்போது எம்மூடே பரபரப்பாக உலாவிவரும் இணையத்தளங்களுக்கு:

இப்போது உள்ள இலத்திரணியல் உலகில் ஒரு இணையத்தளத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் இலகுவானது… CMS இல் இகு ஒரு அரை மணி நேர வேலை   அதுவும் இப்போதெல்லாம்  ஒரு செய்தியை வெளியிட்டால் அப்படியெ அதை கொபி – பேஸ்ர் செய்து போடுவது என்பது நாளுக்கு நாள் பெருகும் இணைய ஊடகங்களின் வேலையை மிகவும் இலகு படுத்திவிட்டது அதைவைத்துக்கொண்டு தமிழ்மக்களின் அரசியல் வாழ்வாதாரத்தை  அசைத்து விடாதீர்கள் –  ஊடகம் என்ற ஒன்றை அது தனியார் இணையத்தளமாக இருந்தால் கூட உங்கள்  மூலம் வெளியாகும் செய்தி ஒரு சமூகத்தையே எதிர்விளைவுக்கு உள்ளாக்கும் – உங்கள் இணையத்தளத்தில் செய்திகளைக்கூட்டுவதன் மூலம் நீங்கள் விருந்தினர்களை அதிகரிப்பது மட்டும்தான் உங்கள் நோக்கு என்றால் அதை ஒரு Entertaining இணையத்தளமாக மட்டும் வைத்திருக்கலாமே?

ஏற்கனவே நாம் நொந்து நூலாகிப்போய் இருக்கிறோம் யாரை யார் தூக்கிவிடுவது என்பதே கேள்விக்குறியாக உள்ளது எங்கள் வாழ்க்கை, இங்கு சில அரசியல் வாதிகள் வேறு கதிரை பறி போய்விட்டது என்பது அவர்கள் பிரச்சினை…

சிந்தித்து செயற்பட வேண்டியது ஊடகம் என்ற ஒன்றை தொழிலாகவோ  சேவையாகவோ கையில் எடுத்த உங்கள் ஒவ்வொருவரதும் கடமை….
முகக்கியமாக இணையத்தளத்தில் ஒரு பதிவு என்பது எப்போதும் ஒரு ரெக்கோடாகவே அமைந்துவிடும் அதனால் இது எப்போதும் நிரூபிக்கப்பட்ட பின் வெளியிடப்பட வேண்டியது தவிர்க்கமுடியாத ஒன்று… அல்லது சோஸ்அஜ் நீங்கள் அடையாளப்படுத்தி வைத்திருப்பது உங்கள் வேலையை இலகுவாக்கும் (எங்கிருந்து வரும் செய்தி உம்மையாக, நன்மையாக இருக்கும் என்று)

இக்கருத்து என்னைப்பேன்ற பலரது இணைய ஊடகங்களின் மேல் ஏற்பட்ட அதிருப்தியே… இதை ஏற்றுக் கொள்வரும் கருத்திலெடுக்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்….