பழய பதிவுகள்

எங்கடை பிள்ளையள் தறிகெட்டு அலையுதுகள்!!!!

Tuesday, 5 July 2011
28 வருசமா ரெண்டு தலைமுறையா நாங்கபட்ட கஸ்சமெல்லாம் நாசமாப்போச்சிதே எண்டு அடிக்கடி புலம்புவார் என்ற அப்பர். ஆனா இப்ப கொஜ்சனாளா சொல்லுவார். ” எனக்கு நம்பிக்கை இருக்கிது பிள்ளை எங்கட சனம் வெண்டு போடுங்கள். … ஆனா” என்னப்பா ஆனா ஆவென்னா எண்டு இழுக்கிறியள் எண்டா. “இல்லடி பிள்ளை இந்த இழசுகளுண்டை ஆவேசத்துக்கு அதுக்கு ஒரு ரெண்டு  வருசம் கனக்க ஆனா – இதுகளை வழி நடத்துற 40 துகள்தான் எல்லாத்தையும் குழப்பிப்போடுங்கள்போலை.

with LTTE Flag

ஒவ்வொருபக்கத் தாலை கூட்டம் போடுதுகள் – ஒருத்தரை ஒருத்தர் குதறித்தள்ளுதுகள் – எங்கடை தலைவர் – எங்கடை புலிக்கொடி – எங்கடை தமிழீழம் எண்டு வேறை. எங்கடை தலைவர் எங்கடை தலைவர்தான் – எங்கடை கொடி புலிக்கொடி தான் – எங்கடை நாடு தமிழீழம் தான் – அதில ஒரு சந்தேகமும் இல்லை – ஆனா தமிழீழம் அது எங்ககிடக்கு எப்படிக்கிடக்கு அது தானே பிரச்சினை இப்ப.” கொஞ்சம் பொறுங்கோப்பா உங்களுக்கு வயசு போட்டுது பேசாமை வாயை மூடிக்கொண்டு இருங்கோ வேணுமெண்டா இண்டைக்கு செவ்வாக்கிழமை வெளிக்கிட்டுக்கொண்டு கோயிலுக்குப் போங்கோ. நீங்கள் எல்லாம் அந்தக் காலத்திலை பத்தவைச்ச நெருப்புத்தானே இண்டைக்குப் பத்தி எரியுது.

எடி பிள்ளை என்ன நீ கதைக்கிறா. எங்கடை காலம் வேறை உங்கடை காலம் வேறை அண்டைக்கு எங்களட்ட ஒண்டுமே இருக்கேல்ல அப்ப நாங்க ஆயுதத்தை தூக்குவம் எண்டு வெளிக்கிட்டம். இண்டைக்கு அப்பிடியே நீங்கள் எல்லாம் ஆழுக்காள் வெளிநாட்டிலை லெற்சாதி பதியள் எல்லா வீட்டிலையும் டாக்கத்தரும் எஞ்சினியரும் வேற என்னன்னவோ எண்டு படிப்பெல்லாம் படிச்சு பட்டம் பெற்று வச்சிருக்கியள். இப்ப என்ன இல்லை உங்களட்டை –  ஒவ்வொரு வீட்டிலையும் ஒரு அரசியல் வாதியையும் வக்கீலையும் என்னும் என்ன துரையிலை படிச்சு ஒரு இடத்திலை இருந்துகொண்டு கதைச்சா உலகம் காது குடுக்குமோ அது தான் அந்த பாட்டுக்காறப்பிள்ளை  என்ன பேர் அவளுக்கு…” “எம ஜ் ஏ” ஓ அப்பா?” ஓ அந்தப்பெடடதான்” அதுமாதிரி 10 குடும்பத்துக்கு ஒருத்தர் வெளிக்கிட்டா எப்படி இருக்கும்? – அத விட்டிட்டு புலிக்கொடியைப் பிடிச்சுக்கொண்டு கிறவுண்டுக்கை ஓடுறன் எண்டு ஓடினா எவன் எங்களை மதிப்பான் – பைத்தியம் எண்டு நினைக்கமாட்டான்?”
அட இதுவே உங்கடை பிரச்சினை ” நீங்க செல்லுறது சரிதானப்பா – அடுத்தமுறை கிறவுண்ட வாசல்லை ஏசியன் வந்தா அவன்  புலிக்கொடி வச்சிருக்கேல்லையோ எண்டு பாத்திட்டுத்தான் உள்ளை விடப்போறாங்காள் – அது தான் மிச்சமாகப்போகுது” அப்பர் தொடர்ந்தார் ” எல்லாத்துக்கும் காரணம் இந்தப்பெடியளை சரியாக் கொண்டு நடத்தினம் இல்லை எண்டுதான் எனக்கு தோன்றுது. கடவுள்தான் இந்தப் பிள்ளையழுக்காவது ஒரு வழிகாட்டோணும்.

உலகம் தெரியாமலெ வழருது என்ரை பேத்திக்குட்டி

Friday, 1 July 2011
அண்டைக்கு ஒரு வயசு போன அம்மாவைச் சந்திச்சன். எப்படி அம்மா இருக்கிறையள் எண்டு நான் கதையைத் தொடங்கினன். அந்தம்மா “என்னடி பிள்ளை நமெக்கென்ன கரைச்சல் நல்லாத்தான் ழூண்டு  நேரமும் சாப்பிட்டுக் கொண்டு ஊர் மேஞ்சுகொண்டு இருக்கிறன்” எண்டு தொடங்கின மனிசி மூச்சுவிடாம “யோசனை எல்லம் என்ரை மருமவளைப்பற்றித்தான் பாவம் அது ரெண்டு வருசமா சிறைக்கிள்ளை பிஞசுக் குழந்தையையும் வச்சுக் கொண்டு கஹ்ரப்படுகுது” என்னனை பிஞசுக்குழந்தையோடையோ? – பிள்ளையையும் சேத்துப்பிடிச்சுக் கொண்டு போய் வச்சிருக் கிறாங்களோணை ………………

Baby in Prison இல்லையடி பிள்ளை ரெண்டு வருசமா அவள் பிள்ளைக்குத்தவம் இருக்க 98 கடைசிலதான் கடவுள் கண்ணைத்துறந்து அவளுக்கு வயித்திலை ஒரு புள்ளப்பபூச்சி வந்திச்சுது – அதுக்குள்ளை சண்டை தொடங்கி எல்லாக்கஸ்ரத்துக்காளயும் ஒருமாதிரி உயிரைக்கையிலை பிடிச்சுக்கொண்டு முகாமுக்குவந்து சேர்ந்திதுகள் – நாங்களும் எல்லாரும் அப்பாடா உயிரோட வந்திட்டுதுகள் எண்டு பாக்க – ஆரே பாளாப்போனதுகள் காட்டிக் குடுத்திட்டுதுகள் – அதுக்குபிறகு பிள்ளையும் அதுக்கிள்ளையே பிறந்து இப்ப அதுக்குரெண்டு வயசும் ஆகப்போகுது – பாவம் அவழுண்டை மனுசனும் எங்கையண்டு ஆருக்கும் தெரியாது

என்ன பாவஞ்செய்தது அந்தப் பாலன் – என்ரை எல்லாப் போரப்பிள்ளையளும் பாக்குக்குப் போறதும் – ஜஹ்கிறீம் சாப்பிடிறதும் – காட்டூண் பாக்கிறதும் – கொம்பிற்றர்லை பாட்டுக் கோக்கிறதுமா இருக்க இதுமட்டும் என்ன பாவஞ்செய்து அந்த பெட்டேன்ரை வயித்திலை வந்து பிறந்திச்சிதோ. உலகம் தெரியாமலே வளருது என்ரை பேத்திக்குட்டி

இண்டைக்கு நான் நினைச்சிட்டன் இதை உங்களுக்குச் சொல்ல

Thursday, 30 June 2011 at 12:55

இண்டைக்கு நான் நினைச்சிட்டன் இதை உங்களுக்குச்சொல்ல

எதுக்கெதுக்கோ எல்லாம் ஆர்ப்பாட்ம் செய்யினம்   துடுப்பாட்டத்துக்கு எதிரா ஆர்ப்பாட்டம் – இலங்கைச் சாமானுகளுக்கு ஆர்ப்பாட்டம் – இலங்கைக்கு ஆக்கள அனுப்பினா ஆர்ப்பாட்டம் அது ஆரை எண்டாலும் சரி – விட்டா தும்மினாக்கூட் ஆர்ப்பாட்டம் செய்வாங்கபோல.

இளையோர் நீங்க ஆர்வமா இருக்கிறீங்க எண்டு தெரியுது ஆனா அத எப்படிப் பயன் படுத்தோணும் எண்டு கெஞ்சம் என்னும் யோசிக்கோணும்.

நேற்றைக்கு ஒருத்தர் வீட்ட வந்தார் நாட்டு அக்கறை நிறைய இருக்கு அவருக்கு – 16 வருடங்கள் காட்டிலை வாழ்ந்தவர் ராமனைப்போலை – இப்ப அவருக்கு உடம்பிலை தென்பில்லை – மனசிலை தையிரியம் இல்லை – நம்மைப்பேல பேல

கேக்கிறார் ஏன் இவங்கள் எதுக்கெடுத்தாலும் ஆர்ப்பாட்ம் செய்யிராங்கள் – இந்த நாட்டுக்காறன் எங்களை வெறுக்கப்போரான் – ஒருக்கா ஆர்ப்பாட்ம் செய்யிரம் பிறகு சாமியக்கொண்டு சுத்திரம் – பிறகு பாத்தா ஊர்க் கழியாட்டங்கள் வெறை – ஆர் கூடக் கொள்ளையடிச்சதெண்டு காட்ட ஏட்டிக்குப் போட்டியா சாமத்திய வீடு நடத்திறம் – அடுத்த சாமத்திய வீடை ஒரு பணக்காரர் நிலவிலை நடத்தப் போராராம் 🙂 செய்தாலும் செய்வினம் ( நாட்டிலை உன்ரை சொந்தக்காரர் எல்லாம் நாலு வேளை சோத்துக்கு வளியில்லாமை அலைய நீ போடுர ஆட்டம் இருக்குதே ….)

அத விடுங்கோ நாதாரியள் நான் விசயத்துக்கு வாரன்
ஏன் எங்கடை இளசுகள் படிச்சவையின்ர வழிநடத்தலிலை ஒரு இங்கிலிசு டிவி தொடங்கலாம் ரேடியோ தோடங்கலாம். இங்கிலிசு பேப்பரை பிரியா அடிச்சு ரொடடிலை விடலாம் மற்றவனும் படிப்பான் எங்கடை பிரச்சினையை..

– ஒரு நாட்டுக்கு ஒரு தமிழ் எம்பியை எண்டாலும் கெண்டரலாம் கனடாமாதிரி.

என்னும் எதாவது பிரியோசனமா கனக்கப் படிச்சவை எல்லாம் சேர்ந்து ஏதாவது யோசிக்கலாமமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s