குழந்தை வளர்ப்பு: விலங்கொடு மனிதராய்……


நன்றி – றஞ்சி (சுவிஸ்)
இன்று புலம் பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய வேண்டியுமிருக்கிறது. இவை சம்பந்தமான கருத்துக்கள், வளர்ப்பு முறை, குழந்தைகளை அணுகும் எமது கலாச்சாரமுறை, எமது குழந்தைகளை நாம் வளர்க்கும் விதம், போன்றவைகளை கேள்விக்குள்ளாக்கும் நிலையும் தேவையும் இன்று எமக்கு அவசியமானதொன்றாக இருக்கிறது. நாம் குழந்தையை ஆளுமையுடன் வளர்ப்பது சம்பந்தமாக பெற்றோர்களாகிய எமக்கு எந்த விதமான அறிவும் முன்னர் இருக்கவில்லை. பெற்றோர்களின் ஆளுமைக்குள்ளேயே அவர்கள் முடங்கிப் போக நேர்கிறது. ஆனால் குழந்தைகளை தனித்துவமாக சிந்திக்க பெற்றோர்கள் விட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லது. நாம் புலம் பெயர்ந்து வந்த பின் தான் இதன் தேவையை உணரக் கூடியதாக இருக்கின்றது. இதனால் குழந்தை வளர்ப்பு பற்றி எமது அறிவை விருத்தி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

Continue reading

Advertisements

புனிதமாகும் திருமணவாழ்க்கை


“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” – திருவள்ளுவர்

கணவன் மனைவி உறவு என்பது ஒரு தவம், காவியம்… என்று எப்படியெல்லாமோ வர்னிக்கலாம் ஆனால் அதை வாழ்க்ககையாக வாழ்ந்தவர்களைக் காண்பது என்பது இப்போது உள்ளசூழலில் மிகவும் அரிது…
நம்மைப்போன்ற பலர் இப்படி நாமும்  வாழவேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதோடு மட்டும் நிறுத்திவிடுகிறோம், சிலர் அவர்கள் வாழ்க்கைமுறையை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொள்கிறோமே தவிர அப்படி நடந்துகொள்ளத் தவறி விடுகிறோம். “நாம் இத்தனையாண்டுகள் ஆயிற்று திருமணம் செய்து” என்று   கூறிக்கொள்பவர்களில் எத்தனை பேர் உண்மையாக ஒருவருக் கொருவர் உள்ளன்போடு வாழ்ந்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே. ஒன்றில் கணவன் அதிகம் விட்டுக்கொடுத்து (எம்ழூரில் இதை பெண்டாட்டி தாசன் என்பர்) காலத்தை ஓட்டுவர் அல்லது மனைவி அதிகம் விட்டுக்குடுத்தோ பயந்து அடங்கி நடந்தோ (இதைத்தான் சிதம்பர ராட்சியம் என்பர்) 10 என்ன 50 ஆண்டுகளைக்களிப்பர். எங்கேயோ ஒரு சில ரத்தினங்கள் மாத்திரம் வாழ்க்கையை வரலாராக வாழ்ந்து காடடுகின்றனர். அப்படிப்பட்ட இரு ரத்தினங்களின் நாப்பது ஆண்டு திருமண நிறைவு விழாதான் நேற்று வெகுசிறப்பாக அவர்கள் நண்பர்களால் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட ஒரு வகை நெகிழ்ச்சிதான் என்னை இந்தப்பதிவை எழுத வைத்தது. (நெகிழ்ச்சி என்பது எம்மைப்புகழும்போது மட்டுமல்ல   அது எம்மை ஏதோ ஒரு வகையில் சேர்ந்தவர்களுக்கு என்றால் கூட  ஏற்படும் இல்லையா?) Continue reading

இருவரும் என் மாணவரே!


இருவரும் என் மாணவரே—————————–

“கோசலை மைந்தா ராமா விடியல் தோன்றித்துலங்குதே எழுந்தருள் உத்தம ஹரியே நடந்திடும் நல்லகாரியம்———————“

என்று காதிற்குள் புகந்த அந்த மென்மையான ஒலி சுப்பிரமணியத்தை கண் விழிக்கச் செய்தது. அவர் மெதுவாகத்தலையைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தார் அது மணி 6 ஜக்காட்டியது. வழமையாக சுப்பிரமணியம் தான் எல்லோருக்கும் முன் எழுந்து வானொலியில் செய்திகளை அலரவிடுவது வழக்கம் ஆனால் இப்போஅவரின் மகள் சஞ்சீவி விடுமுறையில் வந்திருந்ததால், இது அவள் ஆடசிக்காலம். அவள் விருப்பத்துக்குத்தான எல்லாமே நடைபெறும்.
Continue reading

இன்றைய கவிதை


விடியப்போகும் வருடமே!

நிஜங்களின் பிரதி பலிப்பின் மேல் நம்பிக்கைவைக்காமல்
கற்பனைகளின் கண்துடைப்புகள் மேல் நப்பாசை வைத்தவர்க்கு
விடியப்போகும் வருடமே என்ன சொல்லப் போகிறாய்?

_____________________________________________________________
என் வாழ்வின் எல்லைவரை
எதைக் கொண்டு போக நினைக்கிறேனோ – அது
என் கைக் கெட்டாத கனியாகி விடுமோ என்றுதான்
கண்கள் கண்ணீர் செய்ய முயற்சிக்கின்றன
ஆனாலும்………………..
ஒரு நேரம் வந்தால்…
என் குருட்டு விம்பங்களிலும்
ஒளி வெள்ளம் பாய்ந்து வந்தால்…
எனக்கான வசந்த சோலை
என் முன்னேயே வந்து நின்றால்…
நிழலாடிக் கொண்டிருக்கும்
நிகழ்ச்சிச் சித்திரங்கள் என்
வாழ்க்கைத்திரையில் அரங்கேறிவிட்டால்….
இவை எல்லாமே……..?
இல்லையென்று ஆகிவிடக்கூடும் என்று தெரிந்தும் கூட
அந்த கற்பனை நாளை எண்ணி
வாழ்வை கடந்துவேன்!!

வாருங்கள் நாங்கள் போவோம் கோயில்கள் தேடி – அங்கு வருவார்கள் எங்கள் எல்லாததெய்வங்களும்….!


நாம் ஈழத்தமிழர்கள் என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம் – நம்மில் ஒருவரை சகோதரனையோ, சகோதரியையோ, மச்சாளையோ, அத்தானையோ, நண்பரையோ, காதலியையோ  போராளியாக சாகக்குடுத்தவர்கள்.

ஒவ்வெரு வரைச்சுத்தியும் மறக்கமுடியாத வடுக்கள் மடிந்துகிடக்கின்றன. சிலர் சிலாபித்துக்கொள்கிறோம் இவை மறக்கப்பட வேண்டியவை என்று, சிலர் சிலிர்த்துக் கொள்கிறோம் இவை மன்னிக்கமுடியாதவை என்று சிலர் சலித்துக்கொள்கிறோம் இவை சபிக்கப்பட்டவை என்று….

இப்படி ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்தவர்கள்தான் மாவீரர்கள்.
அவர்கள் வெந்த பூமியில் துயிலும் இல்லங்கள் இல்லை நாம் வந்தபூமியில் நம்மில் பலருக்கு இதன் தாற்பெரியம் தெரியவில்லை   அதில் வணங்குமில்லங்கள் வணங்கக்கூடியதாய் இல்லை????

தொலைந்து போன எம் முறவுகள் எங்கே வருவார்கள்? வாருங்கள் எல்லோரும் கோயில்கள் தேடி அங்கே இருப்பார்கள் இந்த தெய்வங்கள் எல்லாம்..

வாருங்கள் போவோம் எம்மில் இருக்கும் அவர்கள் நினைவுகள் சுமந்தபடி

இவர்கள் உண்மையானவர்களா? அவர்கள் உண்மையாணவர்களா என்று பிரித்துப்பார்க்கும் வல்லமை இழந்தவர்கள்னாம் – இவர்களைப்பார்த்து அவர்கள் துரோகம் என்று – அவர்களைப்பார்த்து இவர்கள் சொல்கிறார்கள் இது சுயநலம் என்று – ஈழத்தமிழர்கள் எம் வரலாற்றில் துரோகத்தையும் சுயநலத்தையும் நிறையவே பார்த்துவிட்டோம்… இனி வேண்டாம்

இவர்கள் உண்மையானவர்களா? அவர்கள் உண்மையாணவர்களா என்று பிரித்துப்பார்க்கும் வல்லமை இழந்தவர்கள்னாம் – இவர்களைப்பார்த்து அவர்கள் துரோகம் என்று – அவர்களைப்பார்த்து இவர்கள் சொல்கிறார்கள் இது சுயநலம் என்று – ஈழத்தமிழர்கள் எம் வரலாற்றில் துரோகத்தையும் சுயநலத்தையும் நிறையவே பார்த்துவிட்டோம்… இனி வேண்டாம் இந்த வார்ததைகள் எம் அகராதியில்…

வாருங்கள் நாங்கள் போவோம் கோயில்கள் தேடி – அங்கு வருவார்கள் எங்கள் எல்லாததெய்வங்களும்….!

2011 மாவிரர்நாள் விட்டு விடுவோம் இலக்கணப்பிளையாக – இப்போதே தொடங்கிவிடுவோம் 2012 ஆம் ஆண்டு மாவீரர் நாளைப்பற்றித்திட்டமி…

இதுயாரு புதிதாக என்று சலித்துக்கொள்ளாதீர்கள் இது யாருமல்ல நீங்கள் தான் உங்கள் அசரீரிதான் பேசுகிறது….

என்னினைவு தெரிந்தநாள் முதல் கடைசியாக வன்னியில் நடந்த மாவீரர்நாள் வரை அது புனிதமானது – துக்கம் நெஞசடைக்க ஒவ்வெருவரையும் கண்ணீரோடு கைகூப்பவைக்கும் வணக்கத்துக்குரிய நாளிது கந்தர் சஸ்ரியிலும் புனிதமானது என்னைப் பொருத்தவரை ஒப்பிடுவதற்கு எதுவுமே இல்லை ….

மாவீரர் இல்லங்கள் தேடி மக்கள் படை எடுப்பர் விமான பயம் எதுவும்  எவரையும் தடுத்து நிறுத்தாது வளியற்றோர் வாசலெல்லம் சுடர் வைப்பர் ஆலையங்கள் அழைப்பொலி எழுப்பும்

ஒருவகையில் எல்லேர்வீட்டிலும் சிஸ்டிக்கப்படும் வீரர்களுக்கான் மரணவீடு…

மரணவீடு – நாட்டிலுள்வர்கள் நாதியற்றவாகள் இப்போது அவர்க்கிருக்கும் கடமை தம்முயிர்காப்பது – நாட்டிலில்லாதோர் நாம் எப்படி இதை கொண்டு செல்லப்போகிறோம்?

இப்போது இருப்பது போல் துரோகிகளினதும் சுயநலவாதிகளினதும் கையில் விட்டால் இன்னும் இரு வருடங்களில் மாவிரர்நாளைக்கூட நாம் புத்தகங்களில் படித்து அறிய வேண்டியதாகிவிடும்..

இது யாருடையநாள் மாவீரர்நாள் மாவீரர்கள் யார்? எங்கள் ஒவ்வெருவருடையவர்கள்! இதை அனுஸ்டிக்க வேண்டியவர்கள் யார் நாம் ஒவ்வெருவருமே… இங்கே யாருடைய ஒழுங்கமைப்பும் தேவையில்லை எதற்காகவும் யாருக்கும் நாம் பணங்கொடுக்கவும் தேவையில்லை தமிழீழத்தில் மாவீரர்நாள் கார்த்திகைப் பூவாழ் மட்டுமெ அனுசரிக்கப்படவில்லை சிட்டிகைகளோடும் பூக்களோடும் வாருங்கள் எங்கள் அருகில் உள்ள திறந்தவெளி மைதானங்களுக்கு ; விரிவுரைகளுக்கு தேவையில்லை, மௌனித்து நிற்போம – எம்மைச்சூழ உள்ள மற்ற சழூகத்தினர் பேசட்டும் எம் உணர்வுகூரலைப்பற்றி

துயிலுமில்லங்கள் போலவே சுவையூட்டப்பட் உணவுகளுக்கு தேவையில்லை பகட்டு ஆடைகளுக்கு வேலையில்லை போலி வாய்வீச்சுகளுக்கும் அவசியமில்லை –

பூக்களாலும் தீபங்களாலம் அலங்கரித்துக்கொள்வோம் மௌனித்து வேண்டுதல் செய்வோம் விரைவில் உங்கள் கல்லரை தொடு வோம் என்று…ழூடிய கூடாரங்களுக்குள் நம் சமூகத்தினர்மட்டுமே அறிய நடத்த வேண்டிய அவசியம் என்ன? – எம்மிடம் உள்ள ஒரே உயிர் மூச்சு எம் மாவீரர்கள் தான் அவர்களுக்காக நாம் நினைவுகூறும் இந்நாட்களை சக்தியுள்ள போராட்டதன்மையாக வேண்டியது காலத்தின் கட்டாயம் –

முதலில் எங்கள் Local Guardian News Paper கள் பேசட்டும் எங்கள் தொழுகையின் புனிதம் பற்றி – அப்போது புரியும் புலிகளின் புனிதம்,  நாளை …………..உலகே வியந்து பேசும் இது மட்டும் போதும் எமது போராட்டத்துக்கும் புலிகளுக்கும் அங்கீகரம் பெற்றுக்கொடுக்க

உதயனின் இரட்டை வேடம் அம்பலம்! பிதற்றும் இணையத்தளங்கள்


http://tamilcnn.com/moreartical.php?newsid=7971&cat=srilanka&sel=current&subcat=2

http://www.northlanka.com/?p=2399

Uthayan - Sri lanka Tamil News paperஅட முட்டாள்களே – இலங்கையில் ஒரு சின்ன தமிழ் கடை வைத்திருப்பவர் கூட இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் சலாம் போட்டால் தான் வேலை நடக்கும் அப்படி இருக்க உதயன் மட்டும் விதிவிலக்கா என்ன…
எமது முப்பது வருட போராட்டகாலத்தில் இவர்களின் சேவையும் அவஸ்தையும் ஈடு கொடுப்பும் உங்களைப் போன்ற முகவரி போடக்கூடத் துணிவில்லாத வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பதற்காக இயங்கும்  இணையத்தளங்களுக்கு எங்கு விழங்கப்போகிறது.
நான் முன்னைய குறிப்பில் கூறியதுபோல் விரிந்தினர்களையும் விழம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களையும் மட்டும் கரித்தில் கொள்ளும் உங்களுக்கு இப்டிப்பட்ட மக்கள் ஊடகங்களின் அருமை எங்கு புரியப்போகிறது?????

மீண்டும் ஒரு முறை உங்கள் மரணத்தின் வேதனையை உணரவைத்து விட்ட இணையத்தளம்


http://eelamwar.weebly.com/29863009298030072991-2986300629803016.html

என்னுடைய தனிப்பட்ட கவலை என்னவென்றால் – போராட்டம், தமிழீழம் , புலிகள் அவர்களுடைய வெற்றி எல்லவற்றுக்கும் மேலாக – பிரபாகரன் என்பவர் எம்ஒவ்வெருவர் மனதிலும் அண்ணனாக, மாமாவக, தந்தையா எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளாக மதிக்கப்பட்டவர் – அவர் மறைவை இலங்கை அரசு செய்தியாக அறிவித்ததும (சிந்தனைகளுக்குள் மூள்கும் முன்) ஒவ்வெரு தமிழர் வீட்டிலும் கதரலை ஏற்படுததியது….  எத்தனை உறவுகளை இளந்திருந்த போதும் இது நெஞ்சில் பேர்இடியை ஏற்படுத்தியது – நாம் ஒவ்வெருவரும் எம் எதிர்காளத்தையே இழந்து விட்டதாகவே உணர்ந்தோம் –  ஆனால் அவர் மறணம் என்பதை வரலாற்றில் பதியவிடாமல் பண்ணிவிட்டோம் என்பதுதான் என்னைப் போன்ற பலரது தீராத இனியும் தீர்த்துவிட முடியாத கவலை… உலகத்தமிழரெல்லம் திரண்டு எதிரி எல்லாம் வியக்கும் வகையில் அவரது மரண ஊர்வலத்தை நடத்தி இருக்க வேண்டும் அல்லவா நாம்… அங்கு தொடர்ந்திருக்கும் அவர் போராட்டம் புது வடிவத்தோடு. அதன் பின்பும் அவர்திரும்பி எம் முன் தோன்றினால் – அப்போது கொண்டாடலாம எம் முன் மீண்டும் வந்த எம் கடவுள் என்று……..
ஆனால் அதை நாம் சொல்ப்போனால் நீ துரோகி என்று இலகுவாக பட்டம் சூட்டியிருப்பார்கள்
யார் இதைக் கேக்கப்போகிறார்கள் எம்மையெல்லாம் முட்டாளாக்கிக் கொண்டே போகிறார்கள் துரோகக் கும்பல்கள்

உண்மையை உணரமுடிந்த எம்மைப் போன்றவர்கள் எல்லம் போன மாவீரர் தினத்தைப் போலவே இவ்வருடமும் எம் தலைவரையும் மனதில் கொண்டு தீபம் ஏற்றுவோம்…
எம் மினம் இழைத்துவிட்ட வரலாற்றுத்தவறின் பங்காளிகளில் ஒருவராக கண்ணீர்விட்டு அழுவோம்  – இதைத்தவிர என்னமுடியும் எமக்கு????